Posts

அந்தரங்க நதி

Image
  என் தாத்தா, நான் பிறந்து இரண்டு வயதாகும் முன்பே தவறிவிட்டார். அவருடைய் நினைவு என்பது ஒரு கரும் போர்வை போர்த்தி குனிந்து முகம் பார்த்த ஒரு நெடிய உருவமாக எனக்கு ஒரு புகை மூட்டம் போல் எப்போதும் நினைவில் நிற்கிறது. அதே போல், என் அம்மாவின் பாட்டி, (என் கொள்ளுப்பாட்டி) சிவகாமிப்பாட்டி, எனக்கு “தாரங்கம், தாரங்கம்” என பாடும் சிவந்த உருவமாகவே நினைவு. அவர்கள் வாழ்வையும், பாசத்தின் நெகிழ்வையும் நேரில் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எனினும் தொடர்ந்து ஓடும் நினைவின் இழைகளுக்குள் அவர்கள் எப்போதும் ஏதோ ஒரு கரையில் அமர்ந்தே தான் இருக்கின்றனர். இப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நினைவுகளின் நீரோட்டத்தால் ஒரு நதி எப்போதும் ஓடிக்கொண்டே. இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தோடு அந்த நதி இணைந்தே வருகிறது; வளர்கிறது. நம் வாழ்வு முடிந்த பின்பும் அதில் வழிந்தோடிய நீர், நம் சந்ததியினரின் நினைவுகளில் இடம்மாறி தொடர்ந்து ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. மொழி இல்லாத ஆதிகாலம் முதலாகவே அப்படிக் கடத்தப்படும் நினைவுகள் ஏதோ ஒரு வகையில் கதை வடிவாகவே கடத்தப்பட்டது இயல்பானது. ஒரே நதிக்கரையின் வேறு வேறு இடத்தில் நிற்பவர்களைப் போல ஒரே

இடபம்

Image
  சிலவாரங்களுக்கு முன் ஒரு நெடிய பயணத்தில் வாசித்து முடித்த புத்தகம் இது. இதை எழுதிய பா.கண்மணி, ஒரு அரசு வங்கியில் பலகாலம் பணிபுரிந்து வங்கி செயல்பாடு மற்றும் பங்கு வர்த்தக நடைமுறைகளை நன்கு அறிந்தவர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. பெங்களூரில் வசிக்கும் அவர் பெங்களூரின் பின்னணியில், அதன் பாந்தமான மத்திய நகர்ப்புற இடங்களில் கதையை உலவ விட்டிருப்பதில் ஒரு நேர்த்தி தெரிகிறது. கான்கிரீட் கானகமாக வெகு வேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் நகரில், வீட்டு மாடியில் நின்று நிமிர்ந்து பார்த்தால் நமக்கென்ற நீல ஆகாயமும், வாசலில் மெல்லிய தென்றலோடு பசுமையை தெளிக்கும் மரங்களும் எங்கே போயிற்று என்று பெருமூச்சுடன்  வியக்கும் என்னைப்போன்ற 90களின் மனிதர்களின் குரலை ஒலிக்க விட்டிருக்கிறார். இடபம் என்பதற்கு காளை என்று பொருள் வருகிறது. பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சந்தையின் போக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையில்,  பங்குகளின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையை குறிப்பதாகும். தனிப்பட்ட பங்கு முதலீட்டாளரைப் பொறுத்தவரை இது  ஆர்வத்துடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரைக் குறிக்கும்.  அந்த வகையில் பங்குச் சந்தை என்ப

மூடுபனி விலகும்போது

Image
ஆங்கிலப் புதின வாசிப்பு என்பது எனக்கு சற்றே தாமதமாக தொற்றிய பழக்கம் தான். எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழில் கையில் கிடைத்ததை எல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் இரும்புக்கை மாயாவி, வேதாள மாயாத்மா என்று காமிக்சில் ஆரம்பித்து, மெது மெதுவாக வாண்டு மாமா, பி.டி.சாமி, என்று வேகமெடுத்து, இரண்டாவது மூன்றாவது வகுப்பில், ராஜேந்திரக்குமார், புஷ்பா தங்கதுரை என்று எட்டிப்பிடித்துவிட்டேன். வயசுக்கு மீறிய பிஞ்சிலே பழுத்தது என்று பெருசுகள் முணுமுணுத்தது காதில் விழுந்தாலும் என் வாசிப்பு என்னவோ நிற்கவேயில்லை. காமிக்சுகளில் மாத்திரம் ஆங்கிலம் தமிழ் என்ற பாகுபாடு எப்போதும் இருந்ததில்லை. ஆங்கில நெடும் புதினங்கள் அவ்வப்போது வாசித்தாலும் தமிழ் அளவுக்கு அதில் வேகமில்லை. அதற்கு காரணம் வீட்டில் அப்பா கண்டிப்பாக ஹிந்து பேப்பர் தவிர ஏதும் வாங்குவதில்லை என்பதோடு என் வாசிப்பு அனைத்தும் விடுமுறையில் தாத்தா வீட்டுக்கு ஊருக்கு வரும்போதுதான். கோவைக்கு அருகாமையில் அமைந்த சிறிய ஊரான அங்கே தமிழ் காமிசுக்களுக்கே கோவை சென்று தான் வாங்கி வரவேண்டும். மற்றபடி தினப்பத்திரிக்கை என்றால்

வாயிலைத் தேடி...

Image
  வரலாற்று ஆராய்ச்சி என்ற ஒன்றைப் போல் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயம் வேறொன்று இருந்ததே இல்லை. தெருமுனை அரசியல் பேச்சாளரில் இருந்து பல்கலைக் கழகங்களின் உள்ளரங்கங்களின் முற்றங்கள் வரை தமிழ் வரலாறு எப்போதும் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. அப்படி பேசும் வரலாறு ஒரு பெரும் ஆய்வின் அடிப்படையினாலா அல்லது உணர்வுக் கிளர்ச்சிக்காக பேசப்படுகிறதா என்று பெரும்பான்மை சமூகம் கவலைப் பட்டதில்லை. “ கல் தோன்றி மண்தோன்றா” என்றே பெரும்பாலான உரையாடல்கள் துவங்கும். முறையான பேரகழ்வுகளோ அது தொடர்பான ஆய்வுகளோ முறையாக நடத்தி பதிப்பிக்கப்படாமலேயே பல தரப்பும் தமிழ் வரலாற்றை பந்தாடிவந்தன. பிறகு, இந்திய தொல்லியல் ஆய்வின் பிரிவாக ஐராவதம் மகாதேவன், குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வின் வழியே சற்று ஒளிக்கீற்றுகள் வரத்துவங்கின. அதன் பின்பற்றி பாலகிருஷ்ணன் ஐயா போன்றோர் எடுத்த தொடர் முயற்சி தமிழக தொல்லியல் துறை மூலம் கீழடி வரை வந்து நின்றபோது, ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்திருப்பது கண்கூடானது. இதைத்தவிர ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை சுவாரசியமான தளத்தில் எழுதிய ஆய்வாளர் பலருண்ட

வரலாற்றின் வரையறைகள்

Image
  சிறுவயதில், பள்ளிக்காலத்தில், பாடம் நடத்திய வரலாற்று ஆசிரியர்கள் தொடர்ந்து குச்சியால் அடித்து உருவேற்றிய விஷயங்களில் ஒன்று அரசர்களின் ஆட்சிப் பரப்பை வரைபடங்களில் குறிப்பது. குறிப்பாக மௌரிய மற்றும் குப்த அரச வம்சம் ஆண்ட நிலப்பரப்பை இந்திய வரைபடத்தில் வரைவது ஒரு தேற்றமாகவே நிலைபெற்றது. ஒவ்வொரு தேர்விலும், தென் இந்தியா விடுத்து சற்றேறக்குறைய மொத்த இந்தியப் பரப்பையும் சேர்த்துக் குறித்தால் மொத்த மதிப்பெண் உறுதி. அதேபோல் தான் அசோகர், கணிஷ்கர் போன்றோரின் அரசாட்சியின் தனிச்சிறப்பு. சாலை எங்கும் மரம் நடப்பட்டதையும், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டதையும் சேர்த்து இன்னும் சில வரிகளை இணைத்தால் போதும் அதற்கான மதிப்பெண்ணும் ஓரளவு தேற்றிவிடலாம். வெகு காலம் கழித்து அந்த வம்சங்களின் எந்த ஒரு அரசின் காலத்திலும் மொத்த மானாவாரியாக ஆட்சி செய்த நிலப்பரப்பு அப்படி இருந்ததே இல்லை என்பதும், பள்ளிகளில் சொல்லி கொடுத்தது அந்த வம்சங்களின் அனைத்து அரசர்கள் ஆட்சியில் மாறி மாறி இருந்த நிலப்பரப்பின் தோராயமான குறிப்பு மட்டுமே என்று அறிந்தபோது அந்தக் காதைத்திருகிய அந்த வரலாற்று பாட ஆசிரியர் மீது பரிதாபம் தான் வந்தது.

Anthology of Indian Democracy

Image
In recent times there has been a lot of debate on how the current dispensation is breaking down the Instruments of Democracy and how there is a brazen disregard to the spirit of National unity and the basic constructs of the Constitution. This is raging in the middle of unprecedented polarization of our society and seemingly irreconcilable differences between the polarized factions. Although conflicts and differences are inherent in any democracy, the framework itself had mechanisms to balance them and to resolve them one way or the other without affecting the nature of Democracy. In the past, many such conflicts that were bubbling up the surface were mainly based on Economy, Class and empowerment of masses. Although religion was a subject of contention, there was a clear distinction between “Progressive” and “Regressive” topics and religion was relegated to sides of the regressive hue.   However, post liberalization, contrary to expectation that India would now take leaps and boun

அம்பரம் - தகர்ந்த பிம்பங்கள்.

Image
நாம் நம் சிறுவயதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் உடைந்து போகும் கணங்கள், பல நேரம் வலிமிகுந்ததாக இருக்கும். அப்படி உடையும் போது,   உண்மைக்கும் நம் மனதிலிருந்த பிம்பத்துக்கும் இருக்கும் வேறுபாடு, பிரமிக்க வைக்கும்..இவ்வளவு காலம் இத்தனை பெரிய வேறுபாட்டை எப்படி கவனத்தில் கொள்ளாமல் இருந்தோம் என்று வியப்பாகவும் வலியோடும் பிறகு எண்ணிப்பார்த்துக் கொள்வோம். தீவிர திராவிட உணர்வோடு இருந்த என் தாய்வழி தாத்தா எனக்கு பெரியாரையும் அண்ணாவையும் அடையாளம் காண்பித்தார். மாறாக என் தந்தை   வழியில், தேசிய உணர்வோடு இருந்த குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் சொந்த ஊரில் எங்கள் தாத்தா வீட்டில், உள் கூடத்தில் ஒரு பக்க சுவரில் சாமி படங்கள் மாட்டப்பட்டு   இருக்கும். அதற்கு மேலே காந்தி, நேரு, மற்றும் நேதாஜி படங்கள் இருக்கும். இருந்தபோதும், நேதாஜியை பற்றிய அதீதமான பார்வைகள் எங்கள் மூத்த உறவினர்களிடம் இருந்தது. காந்தியை விட நேதாஜியைத் தான் அவர்கள் உயர்வாக்கச் சொல்வார்கள். அந்த வயதில் அவர் வாழ்வே ஒரு பெரும் சாகசமாகவும் ஒரு உன்னதமாகவும் தெரிந்தது வியப்பொன்றுமில்லை. வளர வளர வாசிப்பும், விசாரணைகளும், காந்தியை,