Posts

Showing posts with the label கட்டுரை

பனிமூட்டத்திற்கு அப்பால்

Image
  சிலவருடங்களுக்கு முன் ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்களோடு ஒரு குறிப்பிட்ட மலையேற்றக் குழுவினருடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை நேரடியாக காண வெவ்வேறு பகுதிகளுக்கு மலையேற்றம் செல்வதுண்டு. அப்படி ஒரு முறை சென்ற பயணக் குழுவில் அனைத்து வயதிலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் வழக்கம் போல் உற்சாகத்தோடு பெரும் அளவில் இணைந்திருந்தனர். பொதுவாக ஏறப்போகும் மலைப்பகுதியைப்பற்றி பெரும் உற்சாகம் குழு முழுவதுமே பரவலாக இருந்தது. பேசிப்பார்த்ததில் பெரும்பாலோனோர், இமயமலை பகுதிகளிலும், வ.கி. மாநிலங்களிலும் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதையே தங்கள் லட்சியமாகக் கூறிக்கொள்வதை கேட்கமுடிந்தது. வெற்றிகரமாக மலையேற்றத்தை முடித்துக்கொண்டு, மறு நாள் காலையில் உணவு நேரத்தில், இயல்பாகவே சிறு சிறு குழுவாக பிரிந்து நிதானமாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு இளம் பெண், கையில் காபிக்கோப்பையுடன், எங்கள் உரையாடலில் வந்து இணைந்து கொண்டார். மெதுவாக இயற்கை, மலையோர தாவரங்கள் மற்றும் பிராணிகள், என்று சென்ற உரையாடல், வீட்டுப் பிராணிகளில் வந்து நின்றது. அப்போது வீட்டில் வளர்க்கும...

உலகத்தின் ஜன்னல் கதவு

Image
  கட்டுரையோடு எனக்கு இருந்த தொடர்பு சற்று கலங்கிய ஒன்றுதான். பொதுவாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம், இரண்டாம் வகுப்பில் இருந்தே, என் தாத்தாவின் உதவியோடு எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்ததில் இருந்து வெகு வேகமாக வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் காமிசுக்களைப் படிக்க ஆரம்பித்தவன், கையில் கிடைத்ததையெல்லாம் படித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தாத்தா வீட்டுக்கு முன்னால் அவர் கட்டி வாடகைக்கு விட்டிருந்த நகைக்கடையில் அவர்கள் வாங்கி வைத்திருந்த வாராந்திர பத்திரிகைகளைப் படிக்கச் சென்று மெதுவாக அங்கே இருந்த நாவல்கள் வரை வேகமெடுத்தது. விடுமுறை நாட்களில், நண்பகல் அங்கே போனால், ஓரமாக ஒரு பென்ச்சில் ஓணான் போல ஒட்டிக்கொண்டு கையில் கிடைத்த பத்திரிக்கைகளையோ நாவலையோ படித்தோகொண்டிருப்பதை அனைவரும் காணலாம். ஆரம்பத்தில் புனைவுகளைப்படிக்க ஆரம்பித்த நான், வெகு சீக்கிரத்திலேயே என் வயதுக்கு மீறிய புத்தகங்களை படிப்பதாக எனக்கு மூத்தவர்கள் முணுமுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது மூன்றாவது படிக்கும் சிறுவன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திர குமார் என்று படிப்பது சற்று அதிகம் தான் அல்லவா? அப்படி கையில் கிடைத்ததையெல்லாம் படித்து, அப்...

இலக்கியம் - நெல்லை மணம்

Image
நீங்கள் சினிமாவை விரும்புபவரா? உங்களுக்கு இது பிடிக்கும். உங்கள் பால்யகால நினைவுகளை மறக்காமல் திரும்ப அசை போடுவதில் சந்தோசப்படுபவரா? கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். திரையிசையை விரும்பி ரசிப்பவரா? இளையராஜாவை தேடி ரசிப்பவரா? உறுதியாகப்பிடிக்கும். திருநெல்வேலி அறிந்தவரா? ரசித்தவரா? பிடிக்கும்... பிடிக்கும்... இதையெல்லாம் தாண்டி, திருநெல்வேலிக்கே இதுவரை சென்றிராதவரா? உங்களுக்கு இதற்கப்புறம் அந்த ஊரும், மக்களும், உணவும், மொழியும் மற்ற எல்லாமும் மிக தீவிரமாக பிடிக்க ஆரம்பித்து விடும்.  பொதுவாக திருநெல்வேலி என்றாலே அது எதோ ஒரு வகையில் நம்மைவிட நம் நாவுக்கு மகிழ்வளிக்கும். நெல்லை என்று சொல்லும்போதே அல்வாவில் ஆரம்பித்து சொதியில் பிரண்டு இன்ன பிற சுவைகள் நம் சுவை மொட்டுக்களில் ஊறத்துவங்குவது  இல்லை? இதைப்படிக்க ஆரம்பிக்கும் போது, திருநெல்வேலியில் உள்ள உணவுகளையும், அதை பரிமாறும் சைவ உணவகங்களையும், முதலில் அறிமுகப்படுத்தி அந்த உணர்வை கிளறி, நம் இதயத்திற்கு வயிற்றின் வழியே எழுத்தால் ஒரு பாலம் அமைக்கத் துவங்குகிறார், சுகா.  சுகா, பலருக்கும் தெரிந்த பேச்சாளரான நெல்லை கண்ணனின்...