Posts

Showing posts with the label கலாச்சாரம்

மருத்துவத்தில் செம்மொழியும் வட்டார மொழிகளும்.

Image
  பகுதி 1: மருத்துவமும் சமஸ்கிருதமும்.  இவ்வாறாக பிராந்திய மொழி என்ற பெயரில் வேறெந்த இந்திய பிராந்திய மொழிக்கும் இல்லாத வகையில் சமஸ்கிருதத்துக்கும் , கூடவே சிறிய அளவில் அரபி / பார்சி மொழிகளுக்கும் , ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியவுடன் , சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் வேறு வகையான கதையாடலை துவங்கினர். அது , சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் மிகப் பழமையான செம்மையான மொழி ( Classical Language ), மற்ற மொழிகள் எல்லாம் வெறும் பிராந்திய மொழிகள் ( vernacular Language ) என்பது தான் அது. அப்படி அனைத்து பிராந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து தான்   தோன்றின   என்று மட்டுமல்ல , மேலும்   சமஸ்கிருதம் விடுத்து அவற்றுக்கெல்லாம் தனியான இருப்பு இல்லை எனவும் கூறத்துவங்கினர். இப்படி ஒரு கதையாடலில் அவர்கள் வெற்றி பெறவும் துவங்கினார்கள்.   இதன் மத்தியில் , 1858 ல் இந்திய நாட்டின் ஆட்சியை பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பார்லிமென்ட்டில் கொண்டுவந்த “ இந்திய சட்டம் ” மூலம் நேரடியாக   கையில் எடுத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும் நடவடிக்கைகளும் ...

கட்டஞ்சாயாவும், பருப்பு வடையும் மற்றும் உடைக்கப்படாத அணையும்.

Image
  ஒரு கட்டஞ்சாயாவும் பருப்பு வடையும் சேர்ந்து உண்ணும் சுவை தற்கால தமிழ் நாவுக்கு பழக்கப்பாடாத ஒன்றென்றாலும் , அது கொண்டு வரும் கேரள மண்ணின் வாசமும் சுவையும் , பழகிய பின் , அது உள்ளொடு ஓடும் ஒரு உணர்வாகவே எப்போதும் இருக்கும். அது போன்றதுதான் கேரள இலக்கியங்களும். அதை படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு அது முதலில் சற்று புரிபடாததாகவும் , எளிதில் பிணைந்து கொள்ள முடியாத கதையோட்டமாகவே இருந்தாலும் , அதன் களமும் , அந்தக் களம் கூடிவரும் மண்வாசனையும் , அதன் மனிதர்களும் பழகியபின் , திரும்பத்திரும்ப நினைவில் ஒட்டிக்கொண்டு ஓடுவது தவிர்க்க முடியாது. அந்த உணர்வை , சுவையை , தமிழ்ப் படுத்த முயற்சிக்கும் போது தான் , அதன் உயிரோட்டம் செத்துப் போய்விடுகிறது. நல்ல வேலையாக அப்படிப்பட்ட எந்த தவறையும் இந்த மொழிபெயர்ப்பாளர் , ஜயசங்கர் மேனன் இங்கு செய்யவில்லை. அதனால் சில நேரங்களில் , மலையாளத்தில் படிப்பது போலவே உணர்வு வருவதும் தவிர்க்க முடியவில்லை. இதை எழுதிய , தம்பி அந்தோணி , தமிழுக்கு முழுதும் அந்நியமல்ல. தமிழில் பல படங்களில் நடித்த பிரபல நடிகர் , பாபு ஆன்டனியின் அண்ணன் என்று சொன்னால் எளிதில் விளங்கும். இவ...

இலக்கியம் - சமர்

Image
ஒரு நிகழ்வை , அதன் உணர்வுகளையும் , சூழலையும் படிப்பவர்களுக்கு நேரில் அதில் பங்கு வகித்தது போல உணரவைக்கும் எழுத்து வெகு சிலதே. தமிழில் இவ்வளவு சிறப்பாக அதை விவரிக்கும் ஒரு படைப்பை நான் இதுவரை படித்ததில்லை. இவ்வளவு நாளாக அதை எப்படி படிக்காமல் விட்டேன் என்று என்னை நானே கடிந்துகொள்ளச் செய்துவிட்டது இந்தப் படைப்பு. " வெயில் பட்டுப்பட்டுக் காச்சுப்போன , மூடி இராத அந்த அத்தனை கறுப்பு முதுகுகளையும் இன்னும் தகிப்பு தணியாத பிற்பகல் சூரியனின் கிரணங்கள் துளைத்துக் கொண்டிருந்தன. துளிர்த்து வெடிக்கும் வேர்வைத் துளிகள் பளீரிட்டு நடு முதுகுக்கு ஓடிக் கலந்து வாய்க்கால் வகுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தன. மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் சுபாவமான மிருகவெறி அந்தப் பொழுதுக்கு மேலோங்கி , பொங்கி நின்ற நிலையில் , மிருக சக்திக்கும் மனித சக்திக்கும் இடையே நடக்கப் போகும் போராட்டத்தைக் காணத் தவிக்கும் பதை பதைப்பில் , முதுகைச் சுடும் வெப்பம் அவர்களுக்குப் பெரிதாகப்படவில்லை." புத்தகம் முழுதும் ஒரு ஜல்லிக்கட்டில் நடக்கும் பலதரப்பட்ட உணர்வுகளையும் , அதற்கு உள்ளாகும் மனிதர்களையும் , அவர்கள் பார்வையில் இ...