சமூகத்தின் மனப்பிறழ்வு
சிறுவயதில் எனக்கு இரவில் படுக்கையை நனைத்துவிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக பயம் தரும் படங்களைப் பார்த்த நாட்களில். அப்போது நான் பார்த்து பயந்த ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப் படம் ஒன்று சமீபத்தில் ஞாபகத்தில் வந்ததது. அதில் மிக நார்மலாக இருக்கும் மனிதர்கள் திடீர் என்று உணர்வு தப்பி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், கொலை செய்யத் தூண்டப்படுவார்கள். அந்த சம்பவம் நடந்த பின் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவொரு ஞாபகமும் இருக்காது. அவர்கள் அப்படி நடப்பதற்கு ஒரு ஹிப்னாட்டிசம் தெரிந்த வில்லன் தான் காரணம் என்று பிறகு தெரிய வரும். அவன் கொலைச் செயலை நிகழ்த்த வேண்டிய ஆட்களை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி, அவர்கள் ஆழ்மனதில் கொலைக்கான உத்தரவை பதிய வைத்துவிடுவான். பிறகு, வேறு ஒரு தருணத்தில் அந்த உத்தரவை தூண்ட ஒரு சமிக்ஞையை கொடுத்து அவர்களை செயல்பட வைத்திருப்பான். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சமிக்ஞைகள். இது ஒரு மர்மக் கதை என்றாலும், நம் நிகழ் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் இதற்கு சற்றும் குறைந்தவை அல்ல. என்ன, அந்த ஆழ்மன உத்தரவுகள், ஏற்கனவே இனம், மதம், மதம், மொழி என்று ஆழ...