Posts

Showing posts with the label மொழிபெயர்ப்பு

தொலைந்து போன வார்த்தைகள்

Image
  ஒரு கடல் இரு நிலம், ஆங்கிலத்தில் By the sea என்று அப்துல்ரஸாக் குர்னா எழுதிய அழகிய நாவல். குர்னாவை பற்றி புதிதாக சொல்ல ஏதும் இல்லை.ஏற்கனவே அவருடைய இரு நூல்களை வாசித்த அனுபவம் மிக அருமை. அவர் நோபல் பரிசு பெற்றதற்கு முன்பு வெளிவந்த நாவல் இது. அகதியாக குடியேறிய அவர் மனதுக்கு மிக நெருக்கமானதாக இந்த நூல் இருந்திருக்கவேண்டும். நோபல் பரிசின் இணைய காணொளியில் அவர் தேர்ந்தெடுத்து வாசித்தது இந்த புத்தகத்தின் பக்கங்களைத்தான். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சசிகலா பாபு. இவருடைய பத்தாவது மொழி பெயர்ப்பு இது. அந்த அனுபவம் இதில் தெரிகிறது. இவர் மொழிபெயர்த்த ஒரிய எழுத்தாளர் கோபிநாத் மோகந்தியின் மொழிபெயர்ப்பான சோற்றுப்பாடு என் வாசிப்பு பட்டியலில் உள்ளது.  “மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் தேநீர் பருகினோம். ஹாம் துண்டுகளைக் கைகாட்டி வேண்டாமென நான் சிலியாவிடம் தலையாட்டினேன். “பன்றி” காதுவரை இளித்துக்கொண்டுச் சொன்னான் இப்ராகிம், அந்த கேலியை ஜார்ஜியிடமும் சொல்லத் திரும்பினான். “முஸ்லிம் இல்லையா, பன்றியிறைச்சி சாப்பிட மாட்டார், மூத்திரத்தில் சாராயவாடை இருக்காது. சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழ...

சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்

Image
  நம் தலைமுறை போல் கால மாற்றத்தை மிகப்பெரிய அளவில் நேரடியாக உணர்ந்த தலைமுறை இருந்திருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு நடுவில் பாந்தமாக வைத்திருக்கும் ஒரு பெரிய பெட்டியை பதவிசாக அதன் மெல்லிய உறை விலக்கி, அதன் உருளைகளை மிக கவனமாக திருப்பி, சிலோனிலோ, சென்னையிலோ இருந்து ஒலிக்கும் பாடல்களை நிம்மதிப் பெருமூச்சு எழ கேட்பதையும், கனமான கருப்பு வஸ்த்துவை கையில் எடுத்து மெதுவாக எண்களை தேடிச் சுழற்றி, குரல் வந்ததும் பய பக்தியோடு வெளியூரில் இருக்கும் மாமாவின் ஊரையும் எண்ணையும் சொல்லி, காத்திருந்து ஓடிவந்து பேசுவதையும், நாமே மறந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை அதை நாம் சொல்லும்போது எப்படிப் புரிந்து கொள்ளும்? இதில், நமக்குப் பரிச்சயமே இல்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதன் சமூக அமைப்பு, அந்த சமூகங்களின் தொன்மங்கள், வாழ்வியல் ஆகியவற்றை அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரே சொல்லுவதை நமக்கு தமிழில் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய முயற்சி? அப்படி ஒரு முயற்சியைத்தான், லதா அருணாச்சலம் அப்துல்ரஸாக் குர்னாவின் “சொர்க்கத்தின் பறவைகளில்” செய்திருக்கிறார்...

புயலுக்குப் பின்

Image
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும்,  பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது. மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது,  நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு  மாறிப்போனால்,  அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும். சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்...

ஏரோப்பிளேன் என்ஜின் முதல் ஏலக்காய் டீ வரை…

Image
  புத்தகம்: கபர்  ஆசிரியர்: கே. ஆர். மீரா  பதிப்பகம்: எதிர் வெளியீடு ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய நிகழ்வு இது. அப்போது தான் கம்பெனியில் சேர்ந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. வெளிநாட்டில் ஒரு முக்கியமான செயல்பாட்டில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பியிருந்த நேரம். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளனான நான், எங்க துறைக்கு தேவைக்கு மேலயே மென்பொருள் பயன்பாட்டில் பயிற்சி பெற்றிருந்தேன். ஆனா மென்பொருள் நிரல்களைப் பொறுத்தவரை ( Software Programming ) சற்றே பழமையான வழிமுறைகளைக் தான் கற்றுத் தேர்ந்து இருந்தேன். அதோட எங்க மென்பொருள் சம்பந்தமான அடிப்படை நிரல்களை எழுதுவதில் நானா தடவித் தடவி கத்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் ஜாவா, J2K அப்படீன்னு சக்கை போடு போட்டுக்கிட்டிருந்தாலும் நான் வெறும் C மற்றும் சில ஸ்கிரிப்டிங் நிரல்களை வைத்து முடிந்த அளவு சில பல வித்தைகளை செய்து அங்கே பெயர் ஈட்டியிருந்த வேளை. கையில பெரிய கத்தி இருந்தா புல் வெட்டறதுல இருந்த சவரம் செய்யறவைக்கும் எல்லாத்தையும் அத வெச்சே செஞ்சுறலாம்னு நெனைச்ச காலம். சிறு வயசு, இளங்கன்னு பயமறியாதுன்னு எங்க ராமு பெரியப்பா வழக்கமா அள்...

கட்டஞ்சாயாவும், பருப்பு வடையும் மற்றும் உடைக்கப்படாத அணையும்.

Image
  ஒரு கட்டஞ்சாயாவும் பருப்பு வடையும் சேர்ந்து உண்ணும் சுவை தற்கால தமிழ் நாவுக்கு பழக்கப்பாடாத ஒன்றென்றாலும் , அது கொண்டு வரும் கேரள மண்ணின் வாசமும் சுவையும் , பழகிய பின் , அது உள்ளொடு ஓடும் ஒரு உணர்வாகவே எப்போதும் இருக்கும். அது போன்றதுதான் கேரள இலக்கியங்களும். அதை படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு அது முதலில் சற்று புரிபடாததாகவும் , எளிதில் பிணைந்து கொள்ள முடியாத கதையோட்டமாகவே இருந்தாலும் , அதன் களமும் , அந்தக் களம் கூடிவரும் மண்வாசனையும் , அதன் மனிதர்களும் பழகியபின் , திரும்பத்திரும்ப நினைவில் ஒட்டிக்கொண்டு ஓடுவது தவிர்க்க முடியாது. அந்த உணர்வை , சுவையை , தமிழ்ப் படுத்த முயற்சிக்கும் போது தான் , அதன் உயிரோட்டம் செத்துப் போய்விடுகிறது. நல்ல வேலையாக அப்படிப்பட்ட எந்த தவறையும் இந்த மொழிபெயர்ப்பாளர் , ஜயசங்கர் மேனன் இங்கு செய்யவில்லை. அதனால் சில நேரங்களில் , மலையாளத்தில் படிப்பது போலவே உணர்வு வருவதும் தவிர்க்க முடியவில்லை. இதை எழுதிய , தம்பி அந்தோணி , தமிழுக்கு முழுதும் அந்நியமல்ல. தமிழில் பல படங்களில் நடித்த பிரபல நடிகர் , பாபு ஆன்டனியின் அண்ணன் என்று சொன்னால் எளிதில் விளங்கும். இவ...