Posts

Showing posts with the label அறிவியல் புதினம்

புளிப்பு மருந்தும் ஒரு அறிவியல் புனைவும்

Image
“ சாமி… இதப்பாரு, சுக்கு மிட்டாய் மாதிரித்தா… அப்படியே கண்ண மூடிட்டு மொடக்குனு குடிச்சிரு” “இல்ல பாட்டி.. பொய் சொல்றீங்க… அது மருந்து…” “கண்ணு, இதப்பாரு, சீச்சிக்காய் மாதிரியே இருக்கும்… எடுத்து மட மடன்னு வாயிலே போட்டுரு…” “போங்க பாட்டி… சீச்சிக்காயாமா சீச்சிக்கா யி .... அது வேற எதோ வெறும் காயி… சும்மா ஆச காட்டி மோசம் பண்ணாதீங்க..” இது வழக்கமாக சிறுவயத்தில் நான் எடுக்கத்தயங்கும் மருந்தை, உணவை, இன்ன பிற வஸ்த்துக்களை என் பாட்டி என் வாயில் ஊட்ட கைக்கொள்ளும் உத்திகளும், அதற்கான எனது தற்காப்பு செயல்பாடுகளும் தான். இத்தனைக்கும், அவர் என்னிடம் பிரயோகம் செய்யும், பல நேரடி மருத்துவ மூலிகை நடவடிக்கைகளை சளைக்காமல் செயற்படுத்தும், கடமை வீரன்தான் நான். ஒரு மண்டலத்துக்கு, ( 48 நாட்களுக்கு ) விடியற்காலை வெறும் வயிற்றில் பிங் பாங் பந்து சைசில் அரைத்து உருட்டப்பட்ட வேப்பிலை உருண்டையை மோர் ஊற்றி விழுங்குவதாகட்டும், இட்டிலி மாவில் சேர்த்ததுக் கசப்பு குறைத்து உண்ண வேண்டிய முடக்கத்தான் கீரையை வெறுமனே சட்டியில் வணக்கி நேரடியாய் வாயில் போட்டு மென்று முழுங்குவதாகட்டும் ( மருந்ததோட வீரியம், 'காட்' போ