Posts

Showing posts with the label காந்தியம்

காந்தியின் பாதை

Image
காந்தியின் அடையாளங்கள், கொள்கைகள், குறியீடுகள் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று, தவறாகவும், குறுகிய நோக்கங்களுடனும் சித்தரிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதனால் இன்றைய காலகட்டத்தில் அவரைப் பற்றிய உருவகம் மீளக் காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது. அவரைப் பற்றிய நிகழ்வுகளின் வழியே அவரைக் கண்டடைவதும், அதன் வழியாக அவரைப்பற்றிய புரிதலை அடைவதும் இன்றைய தேவை. அவ்வகையில் இந்தப்புத்தகம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆவணமாகவே கருதலாம். அனுபவக் குறிப்பாக ஆரம்பிக்கும் இந்நூல், சில நேரங்களில், மூன்றாம் நபரின் பங்களிப்பை, செவிவழி சம்பவங்களாகக் கூறினாலும், பெரும்பாலும் அண்ணலின் கூடவே பயணித்த காகாவின் அனுபவங்களின் ஊடே செல்வதால், சம்பவங்களின் உண்மைத்தன்மைக்கு பெரிதும் சேதம் நேராமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் என்ற வகையில், நீதிக்கதைகள் (fables) போல் இருந்தாலும், அந்த சிறு சம்பவங்களின் வழியே அவரின் ஆளுமையும், அது உருவாகிய வழியையும் தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், கிலாபத் கிளர்ச்சி ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். அதன் தொடர்ச்சியாக, வைசிராயுடன் நிகழ்ந்த ப