ஊழல் ஒழிப்பு வீரர்களும், அவர்களின் சாகச கதைகளும்...
பொதுவாக தேர்தலுக்குத் தேர்தல், ஊழல் ஒழிப்பு நாயகர்களும் அவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷங்களும் நம் மக்கள் முன் வைக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து, தீவிரமாக மக்களின் தேர்தல் நேர கனவுகளை தூண்டுவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. தேசிய அளவில் சில கால கட்டங்களில் அவை எழுப்பப்பட்டு மக்களும் அதற்கு செவி சாய்த்து, ஆதரவளித்ததும் பிறகு ஏமாந்தததும் நமது சரித்திரத்தில் இடம் பிடித்தே இருக்கிறது. உதாரணமாக, அண்ணா ஹசாரே எழுப்பிய எழுச்சி இதற்கு ஒரு சமீப கால நிகழ்வு. இதில் பெருமளவில் ஈர்க்கப்படுவது நகர்மய நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் தான். பத்திரிக்கைகளை பொறுத்தவரை, அவர்களின் பசிக்கு கிடைத்த தீனி என்று, அவர்கள் அதை பரவலான உணர்வாக சித்தரித்து, அதை படிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கண்களை கவர்ந்து கொண்டு, வருமானத்தை அதில் ஈட்டிக்கொள்கின்றன. உண்மையில் நமது சமூகம் மட்டுமல்ல, வேறு பல சமூகங்களிலும் ஊழல் என்பது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விளங்கியே வந்திருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை, பழங்கால அரசர் காலம் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அளவுகளில் அது ...