Posts

Showing posts with the label வனவிலங்கு

சுதந்திரத்தின் விலை.

Image
இந்த புத்தகத்தின் ஆசிரியர், சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது பெய்ஜிங்கில் இருந்து உள் மங்கோலியாவின் மேய்ச்சல் பகுதிக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் ஒருவர். அப்போது அங்கு இருந்த மேய்ச்சல் நில மங்கோலிய இன மக்களுடன் வாழ்ந்து அந்த வாழ்வை நெருக்கமாக அறிந்து கொண்டு, அதன் பாதிப்பில் எழுதிய புதினமாகும் இது .  அந்த நிலத்தின் கலாச்சாரத்தையம், மக்களையும் நேசிக்க ஆரம்பித்த அவர், அழிக்கப்பட்ட அந்த வாழ்வை மிக நுணுக்கமாகவும் நெகிழத்தக்க வகையிலும் பதிவு செய்த காரணத்தால் மிகுந்த வரவேற்பைப்பெற்ற  நூலானது. சீனாவிலும், பின் ஆசியாவிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற இந்த நூல், தமிழில், சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. சி.மோகன் தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், அதிகம் அறியப்படாதவர். அவரின் தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்புகள் ஏற்கனவே பெரு வரவேற்பைப் பெற்றவை. அவரின் மொழி ஆளுமையால் இந்த நூலை அதன் கணமும், உணர்வும் சற்றும் குன்றாமல் தமிழ் வாசகர்களுக்கு ஏந்தி வழங்கியிருக்கிறார்.   தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணிய...

கானகத்தின் குரல்

Image
 நாம் காணாத கதைக்களங்கள் பல நூறு ஒளிந்திருக்கிறன, நமது பரப்பில். குரலற்றவர்களின், முகமற்றவர்களின் குரல் வழியே பல நூறு சுவாரசியமான கதைகள் கொடுக்க முடியும் என்று லட்சுமி சரவணகுமார் இங்கு உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு வேட்டையின் நூலிழையின் வழியே, ஒரு காட்டின் உள்ளே நம்மை உள்ளிழுத்து ஒரு வனத்தை நம் மனதினுள் விதைத்து, நீரூற்றி, உயிர் பெற வைத்தது, அதனோடு நம்மை வாழவே வைத்திருக்கிறார். கதை நடக்கும் காலம் 1980 களின் ஆரம்பகாலம்... அதன் பரவலான நிகழ்வுகளைச் சுட்டியிருந்தாலும், அவை அவரின் கதைக்குள், எந்த முக்கியமான அடிப்படையையும் பாதிக்கவில்லை. அவரின் காடு காலம் கடந்த ஒன்றாகவே இருக்கிறது, பளிச்சியைப் போல், பாட்டாவைப் போல், அவர்களை வணங்கும் பளியர்களைப் போல்... அதன் மனிதர்கள் அதிக குழப்பமின்றி மிகவும் எளிமையானவர்கள். அவர்களின் வாழ்வியல் மட்டும் அல்ல, மனதாலும். அவர்களின் கோபங்கள், தாபங்கள், கவலைகள், வன்மங்கள் எல்லாமே எளிமையாக, வெளிப்படையாக, உக்கிரமாக வெளிப்படுகிறது. வெகு ஜன வாழ்வில் நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் உறவுகளின் உறுதியும், திண்மையும் இந்த மனிதர்களிடையே இல்லையென்றாலும், அந்த நெகிழ்ந்த உற...