இலக்கியம் - சமர்
ஒரு நிகழ்வை , அதன் உணர்வுகளையும் , சூழலையும் படிப்பவர்களுக்கு நேரில் அதில் பங்கு வகித்தது போல உணரவைக்கும் எழுத்து வெகு சிலதே. தமிழில் இவ்வளவு சிறப்பாக அதை விவரிக்கும் ஒரு படைப்பை நான் இதுவரை படித்ததில்லை. இவ்வளவு நாளாக அதை எப்படி படிக்காமல் விட்டேன் என்று என்னை நானே கடிந்துகொள்ளச் செய்துவிட்டது இந்தப் படைப்பு. " வெயில் பட்டுப்பட்டுக் காச்சுப்போன , மூடி இராத அந்த அத்தனை கறுப்பு முதுகுகளையும் இன்னும் தகிப்பு தணியாத பிற்பகல் சூரியனின் கிரணங்கள் துளைத்துக் கொண்டிருந்தன. துளிர்த்து வெடிக்கும் வேர்வைத் துளிகள் பளீரிட்டு நடு முதுகுக்கு ஓடிக் கலந்து வாய்க்கால் வகுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தன. மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் சுபாவமான மிருகவெறி அந்தப் பொழுதுக்கு மேலோங்கி , பொங்கி நின்ற நிலையில் , மிருக சக்திக்கும் மனித சக்திக்கும் இடையே நடக்கப் போகும் போராட்டத்தைக் காணத் தவிக்கும் பதை பதைப்பில் , முதுகைச் சுடும் வெப்பம் அவர்களுக்குப் பெரிதாகப்படவில்லை." புத்தகம் முழுதும் ஒரு ஜல்லிக்கட்டில் நடக்கும் பலதரப்பட்ட உணர்வுகளையும் , அதற்கு உள்ளாகும் மனிதர்களையும் , அவர்கள் பார்வையில் இ...