Posts

Showing posts with the label கரிசல் மண்

கி.ரா. என்னும் நெருக்கம்.

Image
  90 களின் இறுதியில் தில்லியில் இருந்து வேலையாக , வடநாடு முழுதும் , பயணமாகும் போது , என்னுடன் கூடவே பயணம் செய்யும் புத்தகங்களில் முதன்மையானது கி.ரா.வின் சிறுகதைகளே... மொழியறியா தேசங்களில் , முகமறியா மனிதர்களுடன் , புதுப்புது நிலப்பரப்புகளிலும் கூட , என்னோடு வசித்து , என் வேர்களுக்கு நீர் வார்த்தவை அவர் மொழியும் , அது உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த கரிசல் மனிதர்களுமே... அந்த அபிமானம் எனக்கு என்றுமே அவர் எழுத்துக்களுக்கு உண்டு... பிறகொரு காலத்தில் அவர் புதுவைக்கு நகர்ந்த பின் அவர் எழுத்துக்கள் , குறிப்பாக சிறுகதைகள் , மாற்றத்திற்கு உள்ளான போது , அந்த நெருக்கம் சற்றே நெகிழ்ந்த போதும் , ஒரு முறை பழகிய அந்த கரிசல் மணம் மாறவே இல்லை. தொடர்ந்து அவர் எழுத்தில் அந்த மணத்தை உலகத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்த போதும் , அனுபவிப்பதும் சற்றும் குறையவில்லை. அந்த வகையில் , அவர் சிறுகதை தொகுதி ஒன்று கிண்டிலில் புதிதாக வந்தபோது , உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் இலக்கிய வாழ்வின் நெடிய பரப்பில் படைத்து , வேறு வேறு கால கட்டங்களில் வந்த தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த 40 சிறுகதைகள் இந்தத் தொகு