Posts

Showing posts with the label சீனம்

சுதந்திரத்தின் விலை.

Image
இந்த புத்தகத்தின் ஆசிரியர், சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது பெய்ஜிங்கில் இருந்து உள் மங்கோலியாவின் மேய்ச்சல் பகுதிக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் ஒருவர். அப்போது அங்கு இருந்த மேய்ச்சல் நில மங்கோலிய இன மக்களுடன் வாழ்ந்து அந்த வாழ்வை நெருக்கமாக அறிந்து கொண்டு, அதன் பாதிப்பில் எழுதிய புதினமாகும் இது .  அந்த நிலத்தின் கலாச்சாரத்தையம், மக்களையும் நேசிக்க ஆரம்பித்த அவர், அழிக்கப்பட்ட அந்த வாழ்வை மிக நுணுக்கமாகவும் நெகிழத்தக்க வகையிலும் பதிவு செய்த காரணத்தால் மிகுந்த வரவேற்பைப்பெற்ற  நூலானது. சீனாவிலும், பின் ஆசியாவிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற இந்த நூல், தமிழில், சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. சி.மோகன் தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், அதிகம் அறியப்படாதவர். அவரின் தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்புகள் ஏற்கனவே பெரு வரவேற்பைப் பெற்றவை. அவரின் மொழி ஆளுமையால் இந்த நூலை அதன் கணமும், உணர்வும் சற்றும் குன்றாமல் தமிழ் வாசகர்களுக்கு ஏந்தி வழங்கியிருக்கிறார்.   தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணிய...