காணப்படாத மனிதர்கள்
ஈழ மக்களின் ஏதிலி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி அணைத்துக்கொண்ட வாழ்வு அல்ல. அப்படிப்பட்ட வாழ்வைத் தேடிக்கொண்ட ஒவ்வொருவரும் வேறுபட்ட மனவோட்டங்களும், பின்னணியும் கொண்டவர்கள். அப்படி முகமற்று, முகவரியற்று உலவும் அந்த மனிதர்கள் வெகு சராசரியானவர்கள். போர் வாழ்வின் தியாகங்களை, சாகசங்களை, வெற்றிகளை, அவலங்களை அவர்கள் மேல், ஏற்றாமல், அவற்றின் எதிரொலிகளாய், சாதாரண மனிதர்களாக அவர்களின் சாமானிய சறுக்கல்களுடனும், சமரசங்களுடனும் நடமாடவிடுவது அரிது. பொதுவாகவே ,ஈழ மக்களை, தியாகம், ஒடுக்குமுறை, வீரம் என்று பல சட்டகங்களில் அடைத்தே பல வகை எழுத்துக்களால் தமிழகத்தின் சகோதர உறவுகளுக்கு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பலவேறு அரசியல், இருப்பு சார்ந்த காரணங்கள் இருந்தாலும், அதைத்தாண்டி அவர்களை, அவர்களின் வாழ்வை, புலம்பெயர்ந்தவர்களாக, ஏதிலிகளாக, அன்றாடம் சந்திக்கும் சாமானிய மனிதர்களாக படம்பிடிக்கும் எழுத்துக்களும் எழுத்தாளர்களும் மிக மிகக் குறைவு. அப்படி அந்த வகையில் தனியாக தெரியும் எழுத்துக்களில் சயந்தனின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த சிறுகதைதொகுப்ப...