Posts

Showing posts with the label புதினம்

ஸ்ரீபிரியா கேட்ட பாடல்

Image
  எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன. அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வர...

ஏரோப்பிளேன் என்ஜின் முதல் ஏலக்காய் டீ வரை…

Image
  புத்தகம்: கபர்  ஆசிரியர்: கே. ஆர். மீரா  பதிப்பகம்: எதிர் வெளியீடு ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய நிகழ்வு இது. அப்போது தான் கம்பெனியில் சேர்ந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. வெளிநாட்டில் ஒரு முக்கியமான செயல்பாட்டில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பியிருந்த நேரம். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளனான நான், எங்க துறைக்கு தேவைக்கு மேலயே மென்பொருள் பயன்பாட்டில் பயிற்சி பெற்றிருந்தேன். ஆனா மென்பொருள் நிரல்களைப் பொறுத்தவரை ( Software Programming ) சற்றே பழமையான வழிமுறைகளைக் தான் கற்றுத் தேர்ந்து இருந்தேன். அதோட எங்க மென்பொருள் சம்பந்தமான அடிப்படை நிரல்களை எழுதுவதில் நானா தடவித் தடவி கத்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் ஜாவா, J2K அப்படீன்னு சக்கை போடு போட்டுக்கிட்டிருந்தாலும் நான் வெறும் C மற்றும் சில ஸ்கிரிப்டிங் நிரல்களை வைத்து முடிந்த அளவு சில பல வித்தைகளை செய்து அங்கே பெயர் ஈட்டியிருந்த வேளை. கையில பெரிய கத்தி இருந்தா புல் வெட்டறதுல இருந்த சவரம் செய்யறவைக்கும் எல்லாத்தையும் அத வெச்சே செஞ்சுறலாம்னு நெனைச்ச காலம். சிறு வயசு, இளங்கன்னு பயமறியாதுன்னு எங்க ராமு பெரியப்பா வழக்கமா அள்...

புளிப்பு மருந்தும் ஒரு அறிவியல் புனைவும்

Image
“ சாமி… இதப்பாரு, சுக்கு மிட்டாய் மாதிரித்தா… அப்படியே கண்ண மூடிட்டு மொடக்குனு குடிச்சிரு” “இல்ல பாட்டி.. பொய் சொல்றீங்க… அது மருந்து…” “கண்ணு, இதப்பாரு, சீச்சிக்காய் மாதிரியே இருக்கும்… எடுத்து மட மடன்னு வாயிலே போட்டுரு…” “போங்க பாட்டி… சீச்சிக்காயாமா சீச்சிக்கா யி .... அது வேற எதோ வெறும் காயி… சும்மா ஆச காட்டி மோசம் பண்ணாதீங்க..” இது வழக்கமாக சிறுவயத்தில் நான் எடுக்கத்தயங்கும் மருந்தை, உணவை, இன்ன பிற வஸ்த்துக்களை என் பாட்டி என் வாயில் ஊட்ட கைக்கொள்ளும் உத்திகளும், அதற்கான எனது தற்காப்பு செயல்பாடுகளும் தான். இத்தனைக்கும், அவர் என்னிடம் பிரயோகம் செய்யும், பல நேரடி மருத்துவ மூலிகை நடவடிக்கைகளை சளைக்காமல் செயற்படுத்தும், கடமை வீரன்தான் நான். ஒரு மண்டலத்துக்கு, ( 48 நாட்களுக்கு ) விடியற்காலை வெறும் வயிற்றில் பிங் பாங் பந்து சைசில் அரைத்து உருட்டப்பட்ட வேப்பிலை உருண்டையை மோர் ஊற்றி விழுங்குவதாகட்டும், இட்டிலி மாவில் சேர்த்ததுக் கசப்பு குறைத்து உண்ண வேண்டிய முடக்கத்தான் கீரையை வெறுமனே சட்டியில் வணக்கி நேரடியாய் வாயில் போட்டு மென்று முழுங்குவதாகட்டும் ( மருந்ததோட வீரியம், 'காட்' போ...