Posts

Showing posts with the label தமிழ்க்கலாச்சாரம்

ஸ்ரீபிரியா கேட்ட பாடல்

Image
  எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன. அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வருடங்

சொல்லப்படாத வரலாறுகள்....

Image
  சிறுவயதில், தமிழின்  சரித்திரக்கதைகள் எனக்கு அறிமுகமானது குமுதம் மற்றும் கல்கி இரண்டிலும் தான். அதிலும் குமுதத்தில் தொடர்ந்து சரித்திரக்கதைகள் என்ற பெயரில் வந்த கதைகள் அனைத்திலும், பொதுவாக குதிரையில் விரைந்தோ, கப்பலில் பயணம் செய்தோ சாகசம் செய்யும் இளவரசர்களும், இடை சிறுத்த, வளைவு நிறைந்த, அந்த இளவரசர்கள் வாயைத்திறந்து இரட்டை அர்த்தம் தெறிக்கும் வசனங்களை பேசும் போது மட்டும் முகம் சிவக்கும் பைங்கிளிகளும் தான் பெரும்பாலும் உலவினர். ஏனோ திரைப்படங்களில் இருந்த கண்டிப்பு இப்படி மெதுவாக தமிழ் படிக்க ஆரம்பித்து வேகமாக வீட்டில் வரும் வார இதழ்கள் படித்தஇந்த  6-7 வயது சிறுவனுக்கு  இல்லை.  விடுமுறை காலத்தில்  என் தாத்தாவின் திரையரங்கத்துக்கு தினமும் நினைத்த நேரத்தில் சென்று படம் பார்க்கும் எனக்கு  “A”  அல்லது “UA “ சான்றிதழ் வாங்கிய படங்கள் என்றால் மட்டும்,  ( நகரமும் இல்லாது, கிராமமும் இல்லாத அந்த ஊரில் பொதுவாக மேட்டனி காட்சியில் தான் அப்படிப்பட்ட படங்கள் வெளியிடப்படும்) என் வருகை தடை செய்யப்படும். அதற்காகவே வாயில் காப்போர் சிலரை என் தாத்தா ஏற்பாடு செய்திருந்தார் என நினைக்கிறேன். அகஸ்மாத்தாக சி

இலக்கியம் - சமர்

Image
ஒரு நிகழ்வை , அதன் உணர்வுகளையும் , சூழலையும் படிப்பவர்களுக்கு நேரில் அதில் பங்கு வகித்தது போல உணரவைக்கும் எழுத்து வெகு சிலதே. தமிழில் இவ்வளவு சிறப்பாக அதை விவரிக்கும் ஒரு படைப்பை நான் இதுவரை படித்ததில்லை. இவ்வளவு நாளாக அதை எப்படி படிக்காமல் விட்டேன் என்று என்னை நானே கடிந்துகொள்ளச் செய்துவிட்டது இந்தப் படைப்பு. " வெயில் பட்டுப்பட்டுக் காச்சுப்போன , மூடி இராத அந்த அத்தனை கறுப்பு முதுகுகளையும் இன்னும் தகிப்பு தணியாத பிற்பகல் சூரியனின் கிரணங்கள் துளைத்துக் கொண்டிருந்தன. துளிர்த்து வெடிக்கும் வேர்வைத் துளிகள் பளீரிட்டு நடு முதுகுக்கு ஓடிக் கலந்து வாய்க்கால் வகுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தன. மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் சுபாவமான மிருகவெறி அந்தப் பொழுதுக்கு மேலோங்கி , பொங்கி நின்ற நிலையில் , மிருக சக்திக்கும் மனித சக்திக்கும் இடையே நடக்கப் போகும் போராட்டத்தைக் காணத் தவிக்கும் பதை பதைப்பில் , முதுகைச் சுடும் வெப்பம் அவர்களுக்குப் பெரிதாகப்படவில்லை." புத்தகம் முழுதும் ஒரு ஜல்லிக்கட்டில் நடக்கும் பலதரப்பட்ட உணர்வுகளையும் , அதற்கு உள்ளாகும் மனிதர்களையும் , அவர்கள் பார்வையில் இ