Posts

Showing posts with the label சமூகம்

ஆற்றோடு ஒரு பயணம்

Image
வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது. ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை. காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினி

சமூகத்தின் மனப்பிறழ்வு

Image
  சிறுவயதில் எனக்கு இரவில் படுக்கையை நனைத்துவிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக பயம் தரும் படங்களைப் பார்த்த நாட்களில்.  அப்போது நான் பார்த்து பயந்த ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப்  படம் ஒன்று சமீபத்தில் ஞாபகத்தில் வந்ததது. அதில் மிக நார்மலாக இருக்கும் மனிதர்கள் திடீர் என்று உணர்வு தப்பி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், கொலை செய்யத் தூண்டப்படுவார்கள். அந்த சம்பவம் நடந்த பின் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவொரு  ஞாபகமும் இருக்காது. அவர்கள் அப்படி நடப்பதற்கு ஒரு ஹிப்னாட்டிசம் தெரிந்த வில்லன் தான் காரணம் என்று பிறகு தெரிய வரும். அவன் கொலைச்  செயலை நிகழ்த்த வேண்டிய ஆட்களை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி, அவர்கள்  ஆழ்மனதில் கொலைக்கான உத்தரவை பதிய வைத்துவிடுவான்.  பிறகு, வேறு ஒரு தருணத்தில் அந்த உத்தரவை தூண்ட ஒரு சமிக்ஞையை கொடுத்து அவர்களை செயல்பட வைத்திருப்பான். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சமிக்ஞைகள். இது ஒரு மர்மக் கதை என்றாலும், நம் நிகழ் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் இதற்கு சற்றும் குறைந்தவை அல்ல. என்ன, அந்த ஆழ்மன உத்தரவுகள், ஏற்கனவே இனம், மதம், மதம், மொழி என்று ஆழ்மனத்தில் வெறுப்பெனும் வேர் கொண்டு

மருத்துவத்தில் செம்மொழியும் வட்டார மொழிகளும்.

Image
  பகுதி 1: மருத்துவமும் சமஸ்கிருதமும்.  இவ்வாறாக பிராந்திய மொழி என்ற பெயரில் வேறெந்த இந்திய பிராந்திய மொழிக்கும் இல்லாத வகையில் சமஸ்கிருதத்துக்கும் , கூடவே சிறிய அளவில் அரபி / பார்சி மொழிகளுக்கும் , ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியவுடன் , சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் வேறு வகையான கதையாடலை துவங்கினர். அது , சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் மிகப் பழமையான செம்மையான மொழி ( Classical Language ), மற்ற மொழிகள் எல்லாம் வெறும் பிராந்திய மொழிகள் ( vernacular Language ) என்பது தான் அது. அப்படி அனைத்து பிராந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து தான்   தோன்றின   என்று மட்டுமல்ல , மேலும்   சமஸ்கிருதம் விடுத்து அவற்றுக்கெல்லாம் தனியான இருப்பு இல்லை எனவும் கூறத்துவங்கினர். இப்படி ஒரு கதையாடலில் அவர்கள் வெற்றி பெறவும் துவங்கினார்கள்.   இதன் மத்தியில் , 1858 ல் இந்திய நாட்டின் ஆட்சியை பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பார்லிமென்ட்டில் கொண்டுவந்த “ இந்திய சட்டம் ” மூலம் நேரடியாக   கையில் எடுத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டாலும் , சமஸ்கிருத

மருத்துவமும் சமஸ்கிருதமும்

Image
“ உச்ச அதிகாரத்தின் அடையாளமே அது ஒளிந்திருப்பது தான் ; உச்சகட்ட போராட்டமே , அதன் வரலாற்று வேர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்துவது தான். ”  “ மிஷேல்- ரோல்ப் டூயோ ,  வரலாற்றை ஊமையாக்குதல் என்ற தனது நூலில் ”   கி. ஆ. பெ. விசுவநாதம் தனது “ எனது நண்பர்கள் “ என்ற நூலில் , ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது , " டாக்டர் பட்டத்துக்கு விண்ணப்பம் போடுகிறவர்கள் , சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது " என்று கூறிய ஒரு வரி தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது.   இந்த ஒரு வரியை வைத்து இருதரப்புகளும் தொடர்ந்து பந்தாடுகின்றன.   சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு   விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது என்று திராவிடக் கொள்கையாளர்கள் மற்றும் தமிழ் தேசியத் தரப்பும் , இல்லை , அது ஆதாரமற்ற பொய் என்று சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் தரப்பும்   தொடர்ந்து பொது வெளிகளில் உறுமி வருகின்றனர். இதில் எவ்வளவு உண்மை உள்ளது ?   அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரை அதன் வேர்ச் சொற்கள் பல லத்தீன் மொழியில் இருக்கும்.