Posts

Showing posts with the label தமிழகம்

ஸ்ரீபிரியா கேட்ட பாடல்

Image
  எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன. அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வர...

தமிழின் புதிய வெளிகள்

Image
வழக்கமான புதின வாசிப்பு அனுபவங்களில் இருந்து விலகி புதிய வகையான களங்களில், வேறு வகையான அனுபவங்களை தமிழில் பெறவேண்டும் என்றால் மொழிபெயர்ப்பையே பெரும்பாலும் நாட வேண்டி இருக்கிறது. அதைத் தவிர்த்து அப்படி நேரடியாக தமிழில் எழுதப்பட்டதாக வெளிவரும் பல புதினங்கள் சரியான கள அறிவோ, அதற்கான உழைப்போ இன்றி, வெறும் வார்த்தை விளையாட்டுக்களாலும் பல்வேறு சர்க்கஸ் வேலைகள் செய்தும் வாசிப்பவரின் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடிக் கவிழ்ந்து விடுகின்றன. அப்படியே அதில் சில, குறிப்பிட்ட அளவில் வாசிப்பவர்களின் கவனத்தைப் பெற்றாலும், அவற்றில் உள்ள போலித்தனம் சிலகாலங்களில் பல்லிளித்துவிடும். என்னதான் வாராது வந்த இலக்கியமாமணி என்ற பாசாங்கும், வாசகர் வட்ட ஜல்லி அடிப்புகள் இருந்தாலும், அந்த எழுத்துக்களின் உள்ளார்ந்த போலித்தனமும், ஆழமில்லாத பார்வையும் காலப்போக்கில் வெளுத்து விடும். அப்படி பல்வேறு புதினங்களை வாசித்து, சலிப்படைந்து, தமிழிலேயே தமிழின் வேறுபட்ட பரந்த களங்களை காணமுடியுமா என்று ஏங்கியபோது , கிருஷ்ணா நாகரத்தினம் , அந்தத் தேடலுக்கு ஒரு இலக்கும், அந்த இலக்கில் ஒரு சிறப்பான பயண அனுபவத்தையும், தனது ஆழ்ந்த ...

கி.ரா. என்னும் நெருக்கம்.

Image
  90 களின் இறுதியில் தில்லியில் இருந்து வேலையாக , வடநாடு முழுதும் , பயணமாகும் போது , என்னுடன் கூடவே பயணம் செய்யும் புத்தகங்களில் முதன்மையானது கி.ரா.வின் சிறுகதைகளே... மொழியறியா தேசங்களில் , முகமறியா மனிதர்களுடன் , புதுப்புது நிலப்பரப்புகளிலும் கூட , என்னோடு வசித்து , என் வேர்களுக்கு நீர் வார்த்தவை அவர் மொழியும் , அது உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த கரிசல் மனிதர்களுமே... அந்த அபிமானம் எனக்கு என்றுமே அவர் எழுத்துக்களுக்கு உண்டு... பிறகொரு காலத்தில் அவர் புதுவைக்கு நகர்ந்த பின் அவர் எழுத்துக்கள் , குறிப்பாக சிறுகதைகள் , மாற்றத்திற்கு உள்ளான போது , அந்த நெருக்கம் சற்றே நெகிழ்ந்த போதும் , ஒரு முறை பழகிய அந்த கரிசல் மணம் மாறவே இல்லை. தொடர்ந்து அவர் எழுத்தில் அந்த மணத்தை உலகத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்த போதும் , அனுபவிப்பதும் சற்றும் குறையவில்லை. அந்த வகையில் , அவர் சிறுகதை தொகுதி ஒன்று கிண்டிலில் புதிதாக வந்தபோது , உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் இலக்கிய வாழ்வின் நெடிய பரப்பில் படைத்து , வேறு வேறு கால கட்டங்களில் வந்த தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த 40 சிறுகதைகள் இந்தத் ...

ஊழல் ஒழிப்பு வீரர்களும், அவர்களின் சாகச கதைகளும்...

Image
  பொதுவாக தேர்தலுக்குத் தேர்தல், ஊழல் ஒழிப்பு நாயகர்களும் அவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷங்களும் நம் மக்கள் முன் வைக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து,  தீவிரமாக மக்களின் தேர்தல் நேர கனவுகளை தூண்டுவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது.  தேசிய அளவில் சில கால கட்டங்களில் அவை   எழுப்பப்பட்டு மக்களும்  அதற்கு செவி சாய்த்து, ஆதரவளித்ததும் பிறகு ஏமாந்தததும் நமது சரித்திரத்தில் இடம் பிடித்தே இருக்கிறது. உதாரணமாக, அண்ணா ஹசாரே எழுப்பிய எழுச்சி இதற்கு ஒரு சமீப கால நிகழ்வு. இதில் பெருமளவில் ஈர்க்கப்படுவது நகர்மய நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் தான்.  பத்திரிக்கைகளை பொறுத்தவரை, அவர்களின் பசிக்கு கிடைத்த தீனி என்று, அவர்கள் அதை பரவலான உணர்வாக சித்தரித்து, அதை படிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கண்களை கவர்ந்து கொண்டு, வருமானத்தை அதில் ஈட்டிக்கொள்கின்றன. உண்மையில் நமது சமூகம் மட்டுமல்ல, வேறு பல சமூகங்களிலும் ஊழல் என்பது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விளங்கியே வந்திருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை, பழங்கால அரசர் காலம் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அளவுகளில் அது ...