Posts

Showing posts with the label சாதீயம்

என்பிலதனை வெயில் காயும்

Image
  புத்தகத்தின் பெயர்: என்பிலதனை வெயில் காயும் ஆசிரியர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம். ஆரம்பத்தில், தான் படித்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு மும்பைக்கு வேலை தேடிச் சென்று, மிக எளிமையான துவக்கத்துக்குப் பின் படிப்படியாய் வளர்ந்து, ஆரம்பித்த கம்பெனியிலேயே மேலாளராக உயர்ந்தவர் சுப்பிரமணியம் என்கின்ற நாஞ்சில் நாடன். தன்னைவளர்ந்த மண்ணின் மீதும் மொழியின் மீதும் தாளாத நேசம் கொண்டவர். முகம் தெரியாத ஊரில் எளிமையாகத் துவங்கிய அவருக்கு, அவர் பிறந்த மண்ணின் மீதான அடையாளம் மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாஞ்சில் நாடன் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றும். மும்பைக்கு செல்லும் தமிழர் பலர் தவறாமல் சந்திக்கும் பிரச்சினை ஒன்றுண்டு. வடநாட்டில் இருக்கும் பெயருக்குப் பின்னாலான, பின்னொட்டு தான் அது. தமிழகத்தில் இருக்கும் வரை, சில தலைமுறைக்கு முன் சுயமரியாதை சிந்தனைகளால் காணாமல் போன பின்னொட்டு, இங்கிருந்து அங்கே போன பின் அவர்களில் சிலருக்கு பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் திடீரென முளைத்து விடுவது உண்டு. அப்படி ஏதும் நெருக்கடி நாஞ்சில் ந...

மாரி ஆயியும் மாட்டுக்கறியும்.

Image
  பொதுவாக சாதி அடையாளமற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் மேல்தட்டு மனிதர்கள்,  “ நான் சாதியெல்லாம் பார்க்கறது இல்ல சார்… நான் என் நண்பர்களை சாதி பார்க்காம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிடுவேன் தெரியுமா?” என்று கூறுவதை அடிக்கடி நாம்  கேட்டிருக்கலாம். இந்த வார்த்தைகளில் ஒலிக்கும், போலித்தனம், மேட்டிமைத்தனம் மற்றும் மறைமுகமான சாதீயம், வெளிப்படையாக கேட்கப்படாத ஒரு கேள்வியில் ஒளிந்திருக்கிறது. “என்றாவது அதே கீழ்சாதி நண்பரின் வீட்டிற்கு சென்று அவர் உணவைப் பகிர்ந்து உண்டு இருக்கிறீர்களா?” என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில், பெரும்பாலும்   மௌனமாகவே இருக்கும்.   மறைந்திருக்கும் சாதீயம் வெளிப்படும் தருணம் அது. இது போன்ற உரையாடல்கள் எப்போதும் ஒரு வழிப்பாதையானவை.  அது எப்போதும் மேல் சாதியின்  உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி மட்டுமே பேசுமே தவிர தாழ்த்தப்பட்டவர்களின் உணவுப் பழக்கங்களை அல்ல. சில  நாட்களுக்கு முன், சமூக வலைதளத்தில் ஒரு புத்தகத்தின் சுட்டி ஒன்று கிடைத்தது. அதைப் படிக்கும் போது  எழுந்த எண்ணங்கள்தான் மேலே சொன்னவை.  அது...