Posts

Showing posts with the label இந்தியா

பனிமூட்டத்திற்கு அப்பால்

Image
  சிலவருடங்களுக்கு முன் ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்களோடு ஒரு குறிப்பிட்ட மலையேற்றக் குழுவினருடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை நேரடியாக காண வெவ்வேறு பகுதிகளுக்கு மலையேற்றம் செல்வதுண்டு. அப்படி ஒரு முறை சென்ற பயணக் குழுவில் அனைத்து வயதிலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் வழக்கம் போல் உற்சாகத்தோடு பெரும் அளவில் இணைந்திருந்தனர். பொதுவாக ஏறப்போகும் மலைப்பகுதியைப்பற்றி பெரும் உற்சாகம் குழு முழுவதுமே பரவலாக இருந்தது. பேசிப்பார்த்ததில் பெரும்பாலோனோர், இமயமலை பகுதிகளிலும், வ.கி. மாநிலங்களிலும் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதையே தங்கள் லட்சியமாகக் கூறிக்கொள்வதை கேட்கமுடிந்தது. வெற்றிகரமாக மலையேற்றத்தை முடித்துக்கொண்டு, மறு நாள் காலையில் உணவு நேரத்தில், இயல்பாகவே சிறு சிறு குழுவாக பிரிந்து நிதானமாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு இளம் பெண், கையில் காபிக்கோப்பையுடன், எங்கள் உரையாடலில் வந்து இணைந்து கொண்டார். மெதுவாக இயற்கை, மலையோர தாவரங்கள் மற்றும் பிராணிகள், என்று சென்ற உரையாடல், வீட்டுப் பிராணிகளில் வந்து நின்றது. அப்போது வீட்டில் வளர்க்கும...

ஆற்றோடு ஒரு பயணம்

Image
வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது. ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை. காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினி...

மருத்துவமும் சமஸ்கிருதமும்

Image
“ உச்ச அதிகாரத்தின் அடையாளமே அது ஒளிந்திருப்பது தான் ; உச்சகட்ட போராட்டமே , அதன் வரலாற்று வேர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்துவது தான். ”  “ மிஷேல்- ரோல்ப் டூயோ ,  வரலாற்றை ஊமையாக்குதல் என்ற தனது நூலில் ”   கி. ஆ. பெ. விசுவநாதம் தனது “ எனது நண்பர்கள் “ என்ற நூலில் , ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது , " டாக்டர் பட்டத்துக்கு விண்ணப்பம் போடுகிறவர்கள் , சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது " என்று கூறிய ஒரு வரி தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது.   இந்த ஒரு வரியை வைத்து இருதரப்புகளும் தொடர்ந்து பந்தாடுகின்றன.   சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு   விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது என்று திராவிடக் கொள்கையாளர்கள் மற்றும் தமிழ் தேசியத் தரப்பும் , இல்லை , அது ஆதாரமற்ற பொய் என்று சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் தரப்பும்   தொடர்ந்து பொது வெளிகளில் உறுமி வருகின்றனர். இதில் எவ்வளவு உண்மை உள்ளது ?   அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரை அதன் வேர்ச் சொற்கள் ப...

காந்தியின் பாதை

Image
காந்தியின் அடையாளங்கள், கொள்கைகள், குறியீடுகள் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று, தவறாகவும், குறுகிய நோக்கங்களுடனும் சித்தரிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதனால் இன்றைய காலகட்டத்தில் அவரைப் பற்றிய உருவகம் மீளக் காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது. அவரைப் பற்றிய நிகழ்வுகளின் வழியே அவரைக் கண்டடைவதும், அதன் வழியாக அவரைப்பற்றிய புரிதலை அடைவதும் இன்றைய தேவை. அவ்வகையில் இந்தப்புத்தகம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆவணமாகவே கருதலாம். அனுபவக் குறிப்பாக ஆரம்பிக்கும் இந்நூல், சில நேரங்களில், மூன்றாம் நபரின் பங்களிப்பை, செவிவழி சம்பவங்களாகக் கூறினாலும், பெரும்பாலும் அண்ணலின் கூடவே பயணித்த காகாவின் அனுபவங்களின் ஊடே செல்வதால், சம்பவங்களின் உண்மைத்தன்மைக்கு பெரிதும் சேதம் நேராமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் என்ற வகையில், நீதிக்கதைகள் (fables) போல் இருந்தாலும், அந்த சிறு சம்பவங்களின் வழியே அவரின் ஆளுமையும், அது உருவாகிய வழியையும் தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், கிலாபத் கிளர்ச்சி ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். அதன் தொடர்ச்சியாக, வைசிராயுடன் நிகழ்ந்த ப...

வில்லங்க விளையாட்டுக்கள்

Image
  விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின்  மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில்,  அது தந்த  அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது  தயாராகிக் கொண்டிருக்கிறது. அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் . சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின்  மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப்  பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்பு...