வில்லங்க விளையாட்டுக்கள்
விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின் மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில், அது தந்த அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது தயாராகிக் கொண்டிருக்கிறது. அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் . சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின் மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப் பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்பு...