Posts

Showing posts with the label Tamil

வாயிலைத் தேடி...

Image
  வரலாற்று ஆராய்ச்சி என்ற ஒன்றைப் போல் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயம் வேறொன்று இருந்ததே இல்லை. தெருமுனை அரசியல் பேச்சாளரில் இருந்து பல்கலைக் கழகங்களின் உள்ளரங்கங்களின் முற்றங்கள் வரை தமிழ் வரலாறு எப்போதும் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. அப்படி பேசும் வரலாறு ஒரு பெரும் ஆய்வின் அடிப்படையினாலா அல்லது உணர்வுக் கிளர்ச்சிக்காக பேசப்படுகிறதா என்று பெரும்பான்மை சமூகம் கவலைப் பட்டதில்லை. “ கல் தோன்றி மண்தோன்றா” என்றே பெரும்பாலான உரையாடல்கள் துவங்கும். முறையான பேரகழ்வுகளோ அது தொடர்பான ஆய்வுகளோ முறையாக நடத்தி பதிப்பிக்கப்படாமலேயே பல தரப்பும் தமிழ் வரலாற்றை பந்தாடிவந்தன. பிறகு, இந்திய தொல்லியல் ஆய்வின் பிரிவாக ஐராவதம் மகாதேவன், குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வின் வழியே சற்று ஒளிக்கீற்றுகள் வரத்துவங்கின. அதன் பின்பற்றி பாலகிருஷ்ணன் ஐயா போன்றோர் எடுத்த தொடர் முயற்சி தமிழக தொல்லியல் துறை மூலம் கீழடி வரை வந்து நின்றபோது, ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்திருப்பது கண்கூடானது. இதைத்தவிர ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை சுவாரசியமான தளத்தில் எழுதிய ஆய்வாளர் பலர...

புயலுக்குப் பின்

Image
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும்,  பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது. மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது,  நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு  மாறிப்போனால்,  அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும். சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்...

ஆற்றோடு ஒரு பயணம்

Image
வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது. ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை. காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினி...

நீதிக்கட்சி அரசும் அது சந்தித்த மருத்துவக் கல்வி சவால்களும்

Image
பகுதி 1: மருத்துவமும் சமஸ்கிருதமும்.   பகுதி 2:  மருத்துவத்தில் செம்மொழியும் வட்டார மொழிகளும். 1919 ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை தொடர்ந்து , நவம்பர் 1920 ல் மாகாண அரசமைத்த நீதிக்கட்சி , பல்வேறு சவால்களை சந்தித்தது. இருந்தபோதும் அது முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது அதன் சிறப்புக்கு சான்றாகும்.   ஆனால் , ஆட்சி செய்தகாலங்களில் அது சந்தித்த   சவால்கள் வெளியில் இருந்து மட்டும் வரவில்லை. அவர்களுக்குள்ளேயே இருந்த முரண்களும் புதிய பிரச்சனைகளுக்கு காரணமாகின.   மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் , பொது மருத்துவ சேவையை மாகாண அரசின் நேரடிப் பொறுப்புக்கு கொண்டுவந்தது. மருத்துவ கல்வியும் , மருத்துவ வசதியும் , மாகாண அரசின் அதிகாரத்துக்குள் கொண்டுவந்ததுடன் , மருத்துவ கல்லூரிகளும் , புதிய பாடத்திட்டங்களும் , பல புதிய மருத்துவமனைகளும் மலர அது வழிவகுத்தது.   அதே சமயம் , ஒத்துழையாமை இயக்கமும் , சுதேசி இயக்கமும் நாடு முழுவதும் பேரலையை ஏற்படுத்திவந்தன...