Posts

Showing posts with the label தமிழ்

சொல்லப்படாத வரலாறுகள்....

Image
  சிறுவயதில், தமிழின்  சரித்திரக்கதைகள் எனக்கு அறிமுகமானது குமுதம் மற்றும் கல்கி இரண்டிலும் தான். அதிலும் குமுதத்தில் தொடர்ந்து சரித்திரக்கதைகள் என்ற பெயரில் வந்த கதைகள் அனைத்திலும், பொதுவாக குதிரையில் விரைந்தோ, கப்பலில் பயணம் செய்தோ சாகசம் செய்யும் இளவரசர்களும், இடை சிறுத்த, வளைவு நிறைந்த, அந்த இளவரசர்கள் வாயைத்திறந்து இரட்டை அர்த்தம் தெறிக்கும் வசனங்களை பேசும் போது மட்டும் முகம் சிவக்கும் பைங்கிளிகளும் தான் பெரும்பாலும் உலவினர். ஏனோ திரைப்படங்களில் இருந்த கண்டிப்பு இப்படி மெதுவாக தமிழ் படிக்க ஆரம்பித்து வேகமாக வீட்டில் வரும் வார இதழ்கள் படித்தஇந்த  6-7 வயது சிறுவனுக்கு  இல்லை.  விடுமுறை காலத்தில்  என் தாத்தாவின் திரையரங்கத்துக்கு தினமும் நினைத்த நேரத்தில் சென்று படம் பார்க்கும் எனக்கு  “A”  அல்லது “UA “ சான்றிதழ் வாங்கிய படங்கள் என்றால் மட்டும்,  ( நகரமும் இல்லாது, கிராமமும் இல்லாத அந்த ஊரில் பொதுவாக மேட்டனி காட்சியில் தான் அப்படிப்பட்ட படங்கள் வெளியிடப்படும்) என் வருகை தடை செய்யப்படும். அதற்காகவே வாயில் காப்போர் சிலரை என் தாத்தா ஏற்பாடு செய்திருந்தார் என நினைக்கிறேன். அகஸ்மாத்தாக சி

புயலுக்குப் பின்

Image
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும்,  பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது. மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது,  நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு  மாறிப்போனால்,  அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும். சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்வது. அப்படி இயல்பாக

ஆற்றோடு ஒரு பயணம்

Image
வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது. ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை. காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினி

ஏரோப்பிளேன் என்ஜின் முதல் ஏலக்காய் டீ வரை…

Image
  புத்தகம்: கபர்  ஆசிரியர்: கே. ஆர். மீரா  பதிப்பகம்: எதிர் வெளியீடு ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய நிகழ்வு இது. அப்போது தான் கம்பெனியில் சேர்ந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. வெளிநாட்டில் ஒரு முக்கியமான செயல்பாட்டில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பியிருந்த நேரம். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளனான நான், எங்க துறைக்கு தேவைக்கு மேலயே மென்பொருள் பயன்பாட்டில் பயிற்சி பெற்றிருந்தேன். ஆனா மென்பொருள் நிரல்களைப் பொறுத்தவரை ( Software Programming ) சற்றே பழமையான வழிமுறைகளைக் தான் கற்றுத் தேர்ந்து இருந்தேன். அதோட எங்க மென்பொருள் சம்பந்தமான அடிப்படை நிரல்களை எழுதுவதில் நானா தடவித் தடவி கத்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் ஜாவா, J2K அப்படீன்னு சக்கை போடு போட்டுக்கிட்டிருந்தாலும் நான் வெறும் C மற்றும் சில ஸ்கிரிப்டிங் நிரல்களை வைத்து முடிந்த அளவு சில பல வித்தைகளை செய்து அங்கே பெயர் ஈட்டியிருந்த வேளை. கையில பெரிய கத்தி இருந்தா புல் வெட்டறதுல இருந்த சவரம் செய்யறவைக்கும் எல்லாத்தையும் அத வெச்சே செஞ்சுறலாம்னு நெனைச்ச காலம். சிறு வயசு, இளங்கன்னு பயமறியாதுன்னு எங்க ராமு பெரியப்பா வழக்கமா அள்ளி விடுற பழ மொ

புளிப்பு மருந்தும் ஒரு அறிவியல் புனைவும்

Image
“ சாமி… இதப்பாரு, சுக்கு மிட்டாய் மாதிரித்தா… அப்படியே கண்ண மூடிட்டு மொடக்குனு குடிச்சிரு” “இல்ல பாட்டி.. பொய் சொல்றீங்க… அது மருந்து…” “கண்ணு, இதப்பாரு, சீச்சிக்காய் மாதிரியே இருக்கும்… எடுத்து மட மடன்னு வாயிலே போட்டுரு…” “போங்க பாட்டி… சீச்சிக்காயாமா சீச்சிக்கா யி .... அது வேற எதோ வெறும் காயி… சும்மா ஆச காட்டி மோசம் பண்ணாதீங்க..” இது வழக்கமாக சிறுவயத்தில் நான் எடுக்கத்தயங்கும் மருந்தை, உணவை, இன்ன பிற வஸ்த்துக்களை என் பாட்டி என் வாயில் ஊட்ட கைக்கொள்ளும் உத்திகளும், அதற்கான எனது தற்காப்பு செயல்பாடுகளும் தான். இத்தனைக்கும், அவர் என்னிடம் பிரயோகம் செய்யும், பல நேரடி மருத்துவ மூலிகை நடவடிக்கைகளை சளைக்காமல் செயற்படுத்தும், கடமை வீரன்தான் நான். ஒரு மண்டலத்துக்கு, ( 48 நாட்களுக்கு ) விடியற்காலை வெறும் வயிற்றில் பிங் பாங் பந்து சைசில் அரைத்து உருட்டப்பட்ட வேப்பிலை உருண்டையை மோர் ஊற்றி விழுங்குவதாகட்டும், இட்டிலி மாவில் சேர்த்ததுக் கசப்பு குறைத்து உண்ண வேண்டிய முடக்கத்தான் கீரையை வெறுமனே சட்டியில் வணக்கி நேரடியாய் வாயில் போட்டு மென்று முழுங்குவதாகட்டும் ( மருந்ததோட வீரியம், 'காட்' போ