Posts

Showing posts from June, 2022

புதிய தலைமுறை மின் வாகனங்களும் அவை எழுப்பும் கேள்விகளும், சந்தேகங்களும்.

Image
  உலகத் தானியங்கித் துறையில் ஒரு பெரும் திருப்பமாக, மின்சார பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல விபத்துகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் கவலையளிப்பவையாக உள்ளன.   2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ம் தேதி, கவுஹாத்தியைச் சேர்ந்த பல்வந்த்   சிங் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். அதை அவர் மகன்   ஓட்டிச் சென்ற போது, விபத்து நிகழ்ந்தது. சாலையில் ஒரு வேகத்தடையை எதிர்கொண்ட அவர் மகன், பிரேக் பிடிக்க முயற்சித்த போது, எதிர்பாராமல் வண்டி வேகமெடுத்து, தூக்கிவீசப்பட்டு   விபத்துக்குள்ளானதாக பல்வந்த் குறிப்பிடுகிறார். விபத்தில் படுகாயமடைந்த தன் மகனை, பல்வந்த் உடனடியாக கவுஹாத்தியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலமாக அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அங்கே அவரது மகனுக்குப் பலகட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பின்னரும், விபத்தில் பலத்த சேதமடைந்த இரு கைகளும் இயல்பு நிலைக்குத் த...