Posts

Showing posts with the label ஆப்பிரிக்கா

தொலைந்து போன வார்த்தைகள்

Image
  ஒரு கடல் இரு நிலம், ஆங்கிலத்தில் By the sea என்று அப்துல்ரஸாக் குர்னா எழுதிய அழகிய நாவல். குர்னாவை பற்றி புதிதாக சொல்ல ஏதும் இல்லை.ஏற்கனவே அவருடைய இரு நூல்களை வாசித்த அனுபவம் மிக அருமை. அவர் நோபல் பரிசு பெற்றதற்கு முன்பு வெளிவந்த நாவல் இது. அகதியாக குடியேறிய அவர் மனதுக்கு மிக நெருக்கமானதாக இந்த நூல் இருந்திருக்கவேண்டும். நோபல் பரிசின் இணைய காணொளியில் அவர் தேர்ந்தெடுத்து வாசித்தது இந்த புத்தகத்தின் பக்கங்களைத்தான். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சசிகலா பாபு. இவருடைய பத்தாவது மொழி பெயர்ப்பு இது. அந்த அனுபவம் இதில் தெரிகிறது. இவர் மொழிபெயர்த்த ஒரிய எழுத்தாளர் கோபிநாத் மோகந்தியின் மொழிபெயர்ப்பான சோற்றுப்பாடு என் வாசிப்பு பட்டியலில் உள்ளது.  “மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் தேநீர் பருகினோம். ஹாம் துண்டுகளைக் கைகாட்டி வேண்டாமென நான் சிலியாவிடம் தலையாட்டினேன். “பன்றி” காதுவரை இளித்துக்கொண்டுச் சொன்னான் இப்ராகிம், அந்த கேலியை ஜார்ஜியிடமும் சொல்லத் திரும்பினான். “முஸ்லிம் இல்லையா, பன்றியிறைச்சி சாப்பிட மாட்டார், மூத்திரத்தில் சாராயவாடை இருக்காது. சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழுவு. கருப

சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்

Image
  நம் தலைமுறை போல் கால மாற்றத்தை மிகப்பெரிய அளவில் நேரடியாக உணர்ந்த தலைமுறை இருந்திருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு நடுவில் பாந்தமாக வைத்திருக்கும் ஒரு பெரிய பெட்டியை பதவிசாக அதன் மெல்லிய உறை விலக்கி, அதன் உருளைகளை மிக கவனமாக திருப்பி, சிலோனிலோ, சென்னையிலோ இருந்து ஒலிக்கும் பாடல்களை நிம்மதிப் பெருமூச்சு எழ கேட்பதையும், கனமான கருப்பு வஸ்த்துவை கையில் எடுத்து மெதுவாக எண்களை தேடிச் சுழற்றி, குரல் வந்ததும் பய பக்தியோடு வெளியூரில் இருக்கும் மாமாவின் ஊரையும் எண்ணையும் சொல்லி, காத்திருந்து ஓடிவந்து பேசுவதையும், நாமே மறந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை அதை நாம் சொல்லும்போது எப்படிப் புரிந்து கொள்ளும்? இதில், நமக்குப் பரிச்சயமே இல்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதன் சமூக அமைப்பு, அந்த சமூகங்களின் தொன்மங்கள், வாழ்வியல் ஆகியவற்றை அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரே சொல்லுவதை நமக்கு தமிழில் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய முயற்சி? அப்படி ஒரு முயற்சியைத்தான், லதா அருணாச்சலம் அப்துல்ரஸாக் குர்னாவின் “சொர்க்கத்தின் பறவைகளில்” செய்திருக்கிறார். அவ