புலிகளின் காலங்கள்

ஒரு அடர் கானகத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிறேன். இதுவரை நான் பார்த்தேயிராத தாய்லாந்தின் கிழக்குப் பகுதி காட்டிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கிறேன். எப்படி நேர்ந்தது இது? ஒரு தொழில் முறை பயணமாக சென்றபோது கண்டெடுத்த ஒரு புத்தகத்திலிருந்து தான் இந்த நிகழ்ந்திருக்க வேண்டும். வழக்கமாக செய்வது போலவே இந்த முறையும் அந்த ஊரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு சென்று அங்கே என்ன புத்தகம் இப்போது மிகவும் வாசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்று அறியும் ஆவலோடு சென்றேன். அப்போது அங்கிருந்த கடைச் சிப்பந்தி எனக்காக தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகம் தான் இது. இதை எழுதியவர் சனே சங்சுக் (Saneh Sangsuk) எனப்படும் ஒரு தாய்லாந்து எழுத்தாளர். தாய்லந்தின் குறிப்பிடத்தக்க முன்னணி புனைவு எழுத்தாளர் இவர். அந்த நிலத்தின் முக்கிய கதை சொல்லியான சனே, அவர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் குறியீடாக வைத்து தன் எழுத்துகளில் மாயவித்தையை நிகழ்த்திக் காட்டும் வித்தைக்காரர். தற்கால தாய் இலக்கிய பரப்பிலும், உலக இலக்கிய பரப்பிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஆனாலும் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருவது இ...