Posts

Showing posts with the label Malayalam

நீரில் செல்லும் வாழ்வு.

Image
வாழ்வென்னும் நீரோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் ஓடங்கள்தான். ஓரிடத்திலிருந்தே பயணிக்க ஆரம்பிக்கும் ஓடங்களில், பல, இலக்கு மாறி எங்கெங்கோ செல்கின்றன; சில எந்தக்கரையிலும் வந்தேறாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றன; சில கவிழ்ந்தும் போகின்றன. வெகு சிலது மட்டுமே கரையேறி ஆசுவாசம் அடைகின்றன. இதனிடையே ஏதோ ஒரு கரையிலோ, நீரிலோ, அவை ஒன்றையொன்று எதிர்படக்கூடும்; சிறிது தூரம் சேர்ந்தும் பயணிக்கக்கூடும். ஏதோவொரு கரையில் இறுதியில் அடங்கியபின், அலகில்லாத ஒரு கணத்தில் திரும்பிப்பார்த்தால் எதுவும் மிஞ்சுவதில்லை - அவற்றின் நினைவுகளையும் , அலைபோல் அவை ஏற்படுத்திய உணர்வுகளையும் தவிர. அப்படி ஒரு ஓடத்திலேற்றி நீண்ட பயணத்தில் நம்மை அழைத்துச்செல்கிறார், மலையாளத்தின் பெரும் படைப்பாளியான M.T.V. படைப்பாளி என்பதைத்தாண்டி, அவர் ஒரு ராட்சதன் - வெறும் ராட்சதன் அல்ல, படைப்பில் ஒரு பிரும்ம ராட்சதன். சாகித்ய அகாதமி மற்றும் பல விருதுகளை அவருடைய படைப்புகள் பெற்றுள்ளன. அவருடைய மஞ்சு, இறுதி யாத்திரை போன்ற குறும்புனைவுகளையோ, அல்லது அவருடைய நாலு கட்டு , இரண்டாம் இடம் போன்ற நெடும் புனைவுகளையோ வாசித்திருந்தாலும், இந்த புத்தக...