Posts

Showing posts from February, 2023

ஆமைக்கறியும், ஆங்கில புத்தகமும்…

Image
எத்தனையோ நல்ல புத்தகங்களைப் பற்றி இங்கே பதிந்து வந்திருக்கிறேன். ஆனால்  நான் இன்று குறிப்பிடுவது அதுபோல் ஒன்றல்ல. பொதுவாக நல்ல புத்தகங்களையும், அதன் வாசிப்பு அனுபவத்தையும் மட்டுமே குறிப்பிடுவது என்ற உறுதியை ஆட்டிப்பார்க்கவும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா? அப்படி ஒரு ‘ தகுதி ‘ வாய்ந்த புத்தகத்தையும், அதன் எழுத்தாளரையும் பற்றித்தான் இன்று நான் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கமாக புத்தக அங்காடி எங்கிருந்தாலும் உடனே ஆர்வத்துடன் அங்கு சென்று புத்தகங்களை நோட்டமிட்டு, அவற்றில் சில புத்தகங்களை கையில் எடுத்து அவற்றின் சில பக்கங்களை ஒரு திட்டமான நோக்கம் ஏதும்  இல்லாமல்,  படித்து பார்த்து விட்டு அதை வாங்கும் முடிவை எடுப்பது வழக்கம். அப்படிப் படித்து பார்த்து புத்தகங்களை தேர்ந்தெடுப்பதே ஒரு பேரானந்தம் என்பதால், வேறு நாடுகளுக்கு செல்லும் போதும் கூட, அங்கே சில தங்கும் விடுதிகளில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை புரட்டி, சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே தங்கியிருக்கும் போதே படித்து முடிக்க முயல்வேன். இல்லை என்றால் குறித்து வைத்துக்கொண்டு ஊர் வந்ததும் அதை வாங்கிவிடுவேன்.  மைசூ...