அற்புதங்களின் காலம்.
1665 வருடம், இங்கிலாந்து, குறிப்பாக இலண்டன் மாநகரம் பெரும் பேரழிவைச் சந்தித்தது. வசந்தத்தின் வருகை, Black Death என்னும் பெரும் bubonic Plague மரணத்தையும் சேர்த்தே அழைத்து வந்தது. ஒரே வாரத்தில் 7000 மக்கள் மரணித்த உச்சத்தை தொட்டது. மொத்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணக்குழியில் தள்ளப்பட்டனர். இலண்டனின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு காலியானது. ஒரு பெரும் ஊழித்தாண்டவம் ஆடி, 1666ல் மெதுவாக நின்று போனது. அப்படிப் பரவிய இந்தக் கொலைத்தொற்று ஒரு துணிச்சுருள் வழியே எயாம் ( Eyam ) என்ற ஒரு சிறு கிராமத்தைச் சென்று சேர்ந்ததது. அதன் பின், அக்கிராம மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு தொற்றையும், அதன் கொடுமையையும் எதிர்கொண்டு மீண்ட சரித்திரம் தான் இந்த புத்தகத்தின் முடிச்சு. சரித்திர நிகழ்வுகளையும், உண்மையில் வாழ்ந்த மனிதர்களையும், வாய்வழி கேட்ட சம்பவங்களையும் இணைத்து, தன் கற்பனையின் தூரிகையைக் கொண்டு, Geraldine Brooks படைத்த சித்திரம் தான் இந்த “Year of Wonders” என்ற புனைவு. புலிட்சர் விருது பெற்ற Geraldine Brooks, ஆஸ்திரேலியாவில் பிறந்த பத்திரிகையாளர். அவர் எழுதிய முதல் ப...