Posts

Showing posts from December, 2021

வில்லங்க விளையாட்டுக்கள்

Image
  விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின்  மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில்,  அது தந்த  அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது  தயாராகிக் கொண்டிருக்கிறது. அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் . சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின்  மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப்  பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்புகளும், அரசியல் செயற்பாடுகளையு

The Conundrum of Identities

Image
  Travel is something that tests all our limits of theories, learnings and ideas by opening up experiences that challenge and change one's perception, unlike any book.. Travelogues in that sense are always a window to those experiences and can be very interesting at times.   In this Travelogue, Stephen Alter seems to have followed through an emotional thread of tracing his and his spouses roots and in that process has opened up a window that lets us, readers who read it, to a unique and profound viewpoint on subtlety of Pakistan and India relationships. With his easy and smooth flowing language, he captures our attention for keeps.   Stephen Alter, who is a Son of an early American Missionary to India, Rev.Robert Alter, Cousin of Charismatic late Tom Alter, was born in Mussoorie  and an alumni of Woodstock School there. He is passionate about India and particularly about his neck of woods in Himalayan region.   The narration starts with him returning to Landour, to his fa

கட்டஞ்சாயாவும், பருப்பு வடையும் மற்றும் உடைக்கப்படாத அணையும்.

Image
  ஒரு கட்டஞ்சாயாவும் பருப்பு வடையும் சேர்ந்து உண்ணும் சுவை தற்கால தமிழ் நாவுக்கு பழக்கப்பாடாத ஒன்றென்றாலும் , அது கொண்டு வரும் கேரள மண்ணின் வாசமும் சுவையும் , பழகிய பின் , அது உள்ளொடு ஓடும் ஒரு உணர்வாகவே எப்போதும் இருக்கும். அது போன்றதுதான் கேரள இலக்கியங்களும். அதை படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு அது முதலில் சற்று புரிபடாததாகவும் , எளிதில் பிணைந்து கொள்ள முடியாத கதையோட்டமாகவே இருந்தாலும் , அதன் களமும் , அந்தக் களம் கூடிவரும் மண்வாசனையும் , அதன் மனிதர்களும் பழகியபின் , திரும்பத்திரும்ப நினைவில் ஒட்டிக்கொண்டு ஓடுவது தவிர்க்க முடியாது. அந்த உணர்வை , சுவையை , தமிழ்ப் படுத்த முயற்சிக்கும் போது தான் , அதன் உயிரோட்டம் செத்துப் போய்விடுகிறது. நல்ல வேலையாக அப்படிப்பட்ட எந்த தவறையும் இந்த மொழிபெயர்ப்பாளர் , ஜயசங்கர் மேனன் இங்கு செய்யவில்லை. அதனால் சில நேரங்களில் , மலையாளத்தில் படிப்பது போலவே உணர்வு வருவதும் தவிர்க்க முடியவில்லை. இதை எழுதிய , தம்பி அந்தோணி , தமிழுக்கு முழுதும் அந்நியமல்ல. தமிழில் பல படங்களில் நடித்த பிரபல நடிகர் , பாபு ஆன்டனியின் அண்ணன் என்று சொன்னால் எளிதில் விளங்கும். இவரும்