Posts

Showing posts from May, 2024

அந்தரங்க நதி

Image
  என் தாத்தா, நான் பிறந்து இரண்டு வயதாகும் முன்பே தவறிவிட்டார். அவருடைய் நினைவு என்பது ஒரு கரும் போர்வை போர்த்தி குனிந்து முகம் பார்த்த ஒரு நெடிய உருவமாக எனக்கு ஒரு புகை மூட்டம் போல் எப்போதும் நினைவில் நிற்கிறது. அதே போல், என் அம்மாவின் பாட்டி, (என் கொள்ளுப்பாட்டி) சிவகாமிப்பாட்டி, எனக்கு “தாரங்கம், தாரங்கம்” என பாடும் சிவந்த உருவமாகவே நினைவு. அவர்கள் வாழ்வையும், பாசத்தின் நெகிழ்வையும் நேரில் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எனினும் தொடர்ந்து ஓடும் நினைவின் இழைகளுக்குள் அவர்கள் எப்போதும் ஏதோ ஒரு கரையில் அமர்ந்தே தான் இருக்கின்றனர். இப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நினைவுகளின் நீரோட்டத்தால் ஒரு நதி எப்போதும் ஓடிக்கொண்டே. இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தோடு அந்த நதி இணைந்தே வருகிறது; வளர்கிறது. நம் வாழ்வு முடிந்த பின்பும் அதில் வழிந்தோடிய நீர், நம் சந்ததியினரின் நினைவுகளில் இடம்மாறி தொடர்ந்து ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. மொழி இல்லாத ஆதிகாலம் முதலாகவே அப்படிக் கடத்தப்படும் நினைவுகள் ஏதோ ஒரு வகையில் கதை வடிவாகவே கடத்தப்பட்டது இயல்பானது. ஒரே நதிக்கரையின் வேறு வேறு இடத்தில் நிற்பவர்களைப் போல...

இடபம்

Image
  சிலவாரங்களுக்கு முன் ஒரு நெடிய பயணத்தில் வாசித்து முடித்த புத்தகம் இது. இதை எழுதிய பா.கண்மணி, ஒரு அரசு வங்கியில் பலகாலம் பணிபுரிந்து வங்கி செயல்பாடு மற்றும் பங்கு வர்த்தக நடைமுறைகளை நன்கு அறிந்தவர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. பெங்களூரில் வசிக்கும் அவர் பெங்களூரின் பின்னணியில், அதன் பாந்தமான மத்திய நகர்ப்புற இடங்களில் கதையை உலவ விட்டிருப்பதில் ஒரு நேர்த்தி தெரிகிறது. கான்கிரீட் கானகமாக வெகு வேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் நகரில், வீட்டு மாடியில் நின்று நிமிர்ந்து பார்த்தால் நமக்கென்ற நீல ஆகாயமும், வாசலில் மெல்லிய தென்றலோடு பசுமையை தெளிக்கும் மரங்களும் எங்கே போயிற்று என்று பெருமூச்சுடன்  வியக்கும் என்னைப்போன்ற 90களின் மனிதர்களின் குரலை ஒலிக்க விட்டிருக்கிறார். இடபம் என்பதற்கு காளை என்று பொருள் வருகிறது. பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சந்தையின் போக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையில்,  பங்குகளின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையை குறிப்பதாகும். தனிப்பட்ட பங்கு முதலீட்டாளரைப் பொறுத்தவரை இது  ஆர்வத்துடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரைக் குறிக்கும்.  அந்த வக...