மருத்துவத்தில் செம்மொழியும் வட்டார மொழிகளும்.
பகுதி 1: மருத்துவமும் சமஸ்கிருதமும். இவ்வாறாக பிராந்திய மொழி என்ற பெயரில் வேறெந்த இந்திய பிராந்திய மொழிக்கும் இல்லாத வகையில் சமஸ்கிருதத்துக்கும் , கூடவே சிறிய அளவில் அரபி / பார்சி மொழிகளுக்கும் , ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியவுடன் , சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் வேறு வகையான கதையாடலை துவங்கினர். அது , சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் மிகப் பழமையான செம்மையான மொழி ( Classical Language ), மற்ற மொழிகள் எல்லாம் வெறும் பிராந்திய மொழிகள் ( vernacular Language ) என்பது தான் அது. அப்படி அனைத்து பிராந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்று மட்டுமல்ல , மேலும் சமஸ்கிருதம் விடுத்து அவற்றுக்கெல்லாம் தனியான இருப்பு இல்லை எனவும் கூறத்துவங்கினர். இப்படி ஒரு கதையாடலில் அவர்கள் வெற்றி பெறவும் துவங்கினார்கள். இதன் மத்தியில் , 1858 ல் இந்திய நாட்டின் ஆட்சியை பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பார்லிமென்ட்டில் கொண்டுவந்த “ இந்திய சட்டம் ” மூலம் நேரடியாக கையில் எடுத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும் நடவடிக்கைகளும் ...