Posts

Showing posts from January, 2021

மண்ணுக்குள்ளிருந்து எழும் குரல்கள்...

Image
 “மாயமாய் உயிரை மாய்க்கும் கனி(ம) வேலை என்னண்ணா… மார்பில் ரத்தம் வடிய நித்தம் உழைப்போம் என்னண்ணா… பாறைக்குள் படர்ந்து  நிற்கும் பசுமரத்தங்கம்… அதைப்  பக்குவமாய் பிளந்தெடுக்கும் பாட்டாளி சிங்கம்! குறையில்லா  கோபுரமாய் ஆன   அரங்கம்… கொடிய அணுகுண்டு போல வெடிக்கும் சுரங்கம்... மாயமாய் உயிரை மாய்க்கும் கனி(ம) வேலை என்னண்ணா… மார்பில் ரத்தம் வடிய நித்தம் உழைப்போம் என்னண்ணா…” பழைய சி.ஸ்.ஜெயராமனின் குரல் போலவே, மெதுவாக, நடுக்கத்துடன், பின்னணியில் ஒலிக்கும் குரல் நம்மை இருளான சுரங்கத்துக்குள் தொழிலாளர்களுடன் அழைத்துச்செல்லும் போது, அதன் துயரமும், பயங்கரமும், அதை தினமும் போராடி வெல்லும் தொழிலாளர்களின் குரலாகவே அது கேட்கிறது. ஜெலட்டின் விபத்து, பாறை வெடிப்பு போன்றவற்றைப்பற்றியும், அதன் மரணங்களைப்பற்றியும் எதார்த்தமாக அவர்கள் கூறும்போது அவர்களின் குரலில்  இல்லாத பயங்கரம், அதன் அர்த்தம் புரியும் போது  முகத்தில் அறைகிறது…  1800 களில் , ஆங்கிலேய  கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது போது இதற்காகப் பெருமளவில் மக்கள் , தமிழ்நாட்டின் சேலம், கிருஷ்ணகிரி, வடாற்காடு மாவட்டங்க

இலக்கியம் - நெல்லை மணம்

Image
நீங்கள் சினிமாவை விரும்புபவரா? உங்களுக்கு இது பிடிக்கும். உங்கள் பால்யகால நினைவுகளை மறக்காமல் திரும்ப அசை போடுவதில் சந்தோசப்படுபவரா? கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். திரையிசையை விரும்பி ரசிப்பவரா? இளையராஜாவை தேடி ரசிப்பவரா? உறுதியாகப்பிடிக்கும். திருநெல்வேலி அறிந்தவரா? ரசித்தவரா? பிடிக்கும்... பிடிக்கும்... இதையெல்லாம் தாண்டி, திருநெல்வேலிக்கே இதுவரை சென்றிராதவரா? உங்களுக்கு இதற்கப்புறம் அந்த ஊரும், மக்களும், உணவும், மொழியும் மற்ற எல்லாமும் மிக தீவிரமாக பிடிக்க ஆரம்பித்து விடும்.  பொதுவாக திருநெல்வேலி என்றாலே அது எதோ ஒரு வகையில் நம்மைவிட நம் நாவுக்கு மகிழ்வளிக்கும். நெல்லை என்று சொல்லும்போதே அல்வாவில் ஆரம்பித்து சொதியில் பிரண்டு இன்ன பிற சுவைகள் நம் சுவை மொட்டுக்களில் ஊறத்துவங்குவது  இல்லை? இதைப்படிக்க ஆரம்பிக்கும் போது, திருநெல்வேலியில் உள்ள உணவுகளையும், அதை பரிமாறும் சைவ உணவகங்களையும், முதலில் அறிமுகப்படுத்தி அந்த உணர்வை கிளறி, நம் இதயத்திற்கு வயிற்றின் வழியே எழுத்தால் ஒரு பாலம் அமைக்கத் துவங்குகிறார், சுகா.  சுகா, பலருக்கும் தெரிந்த பேச்சாளரான நெல்லை கண்ணனின் மைந்தன். தந்தையின்

காணப்படாத மனிதர்கள்

Image
  ஈழ மக்களின் ஏதிலி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி அணைத்துக்கொண்ட வாழ்வு அல்ல. அப்படிப்பட்ட வாழ்வைத் தேடிக்கொண்ட ஒவ்வொருவரும் வேறுபட்ட மனவோட்டங்களும், பின்னணியும் கொண்டவர்கள். அப்படி முகமற்று, முகவரியற்று  உலவும் அந்த மனிதர்கள்  வெகு சராசரியானவர்கள்.  போர் வாழ்வின் தியாகங்களை, சாகசங்களை, வெற்றிகளை, அவலங்களை அவர்கள் மேல், ஏற்றாமல், அவற்றின் எதிரொலிகளாய், சாதாரண மனிதர்களாக அவர்களின் சாமானிய சறுக்கல்களுடனும், சமரசங்களுடனும் நடமாடவிடுவது அரிது. பொதுவாகவே ,ஈழ மக்களை, தியாகம், ஒடுக்குமுறை, வீரம் என்று பல சட்டகங்களில் அடைத்தே பல வகை எழுத்துக்களால் தமிழகத்தின் சகோதர உறவுகளுக்கு  இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பலவேறு அரசியல், இருப்பு சார்ந்த காரணங்கள் இருந்தாலும், அதைத்தாண்டி அவர்களை, அவர்களின் வாழ்வை, புலம்பெயர்ந்தவர்களாக, ஏதிலிகளாக,  அன்றாடம் சந்திக்கும் சாமானிய மனிதர்களாக படம்பிடிக்கும்  எழுத்துக்களும் எழுத்தாளர்களும்  மிக மிகக் குறைவு. அப்படி அந்த வகையில் தனியாக தெரியும் எழுத்துக்களில் சயந்தனின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த சிறுகதைதொகுப்பில், அப்படிப் பலமனிதர்கள் அவர்களின் அன்

Saffron troll Army - A Political Reality

Image
𝘛𝘩𝘪𝘴 𝘣𝘰𝘰𝘬 𝘸𝘢𝘴 𝘴𝘰𝘮𝘦𝘵𝘩𝘪𝘯𝘨 𝘸𝘩𝘪𝘤𝘩 𝘸𝘢𝘴 𝘩𝘺𝘱𝘦𝘥 𝘢 𝘭𝘰𝘵 𝘢𝘯𝘥 𝘐 𝘴𝘰𝘮𝘦𝘩𝘰𝘸 𝘸𝘢𝘴 𝘱𝘶𝘵𝘵𝘪𝘯𝘨 𝘰𝘧𝘧 𝘳𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘪𝘵. 𝘍𝘪𝘯𝘢𝘭𝘭𝘺, 𝘐 𝘥𝘦𝘤𝘪𝘥𝘦𝘥 𝘵𝘰 𝘵𝘢𝘬𝘦 𝘵𝘩𝘦 𝘱𝘭𝘶𝘯𝘨𝘦. 𝘐𝘧 𝘺𝘰𝘶 𝘢𝘳𝘦 𝘦𝘹𝘱𝘦𝘤𝘵𝘪𝘯𝘨 𝘢 𝘥𝘦𝘦𝘱 𝘪𝘯𝘤𝘪𝘴𝘪𝘷𝘦 𝘳𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩 𝘰𝘯 𝘵𝘩𝘦 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵 𝘢𝘯𝘥 𝘧𝘶𝘵𝘶𝘳𝘦 𝘵𝘳𝘦𝘯𝘥𝘴 𝘰𝘧 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘦𝘭𝘦𝘤𝘵𝘪𝘰𝘯𝘦𝘦𝘳𝘪𝘯𝘨, 𝘩𝘰𝘸 𝘵𝘩𝘦 𝘤𝘶𝘳𝘳𝘦𝘯𝘵 𝘳𝘶𝘭𝘪𝘯𝘨 𝘥𝘪𝘴𝘱𝘦𝘯𝘴𝘢𝘵𝘪𝘰𝘯 𝘴𝘺𝘴𝘵𝘦𝘮𝘢𝘵𝘪𝘤𝘢𝘭𝘭𝘺 𝘦𝘹𝘦𝘤𝘶𝘵𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘴𝘶𝘱𝘱𝘰𝘳𝘵 𝘪𝘵𝘴 𝘰𝘯𝘭𝘪𝘯𝘦 𝘤𝘢𝘮𝘱𝘢𝘪𝘨𝘯𝘴, 𝘪𝘵𝘴 𝘦𝘤𝘰𝘯𝘰𝘮𝘪𝘤𝘴 𝘦𝘵𝘤. 𝘰𝘳 𝘢 𝘱𝘳𝘰𝘧𝘦𝘴𝘴𝘪𝘰𝘯𝘢𝘭 & 𝘦𝘳𝘶𝘥𝘪𝘵𝘦 𝘯𝘢𝘳𝘳𝘢𝘵𝘪𝘰𝘯, 𝘺𝘰𝘶 𝘸𝘪𝘭𝘭 𝘣𝘦 𝘴𝘰𝘳𝘦𝘭𝘺 𝘥𝘪𝘴𝘢𝘱𝘱𝘰𝘪𝘯𝘵𝘦𝘥. 𝘛𝘩𝘦 𝘭𝘢𝘯𝘨𝘶𝘢𝘨𝘦 𝘢𝘯𝘥 𝘵𝘰𝘯𝘦 𝘪𝘴 𝘷𝘦𝘳𝘺 𝘮𝘶𝘤𝘩 𝘵𝘢𝘣𝘭𝘰𝘪𝘥 𝘭𝘪𝘬𝘦. 𝘛𝘩𝘦𝘳𝘦 𝘢𝘳𝘦 𝘯𝘰 𝘨𝘳𝘰𝘶𝘯𝘥 𝘴𝘩𝘢𝘵𝘵𝘦𝘳𝘪𝘯𝘨 𝘳𝘦𝘷𝘦𝘭𝘢𝘵𝘪𝘰𝘯𝘴. 𝘔𝘰𝘴𝘵 𝘰𝘧 𝘵𝘩𝘦 𝘧𝘢𝘤𝘵𝘴 𝘢𝘳𝘦 𝘪𝘯 𝘵𝘩