Posts

Showing posts from March, 2021

A walk in the arcane world

Image
"It would be remiss not to mention the spectre of Karl Marx" Yanis says thanking his influencers in the foreword of the book. That is an interesting way to refer to the legacy of Karl Marx as a 'Specter' coming from a close compatriot of Bernie Sanders and an evolved Marxist himself. For some one who is getting into understanding the current economics with very little understanding of nuts and bolts of it, particularly a techie like me who never had to wade through the maze of its bewildering web, this is book is a nice reckoner. I have read an historical writing on Money by Yuval Harari which was very engaging read, but had lost the way when it meandered into the  future. This book seems be picking off from that altitude and dives deeper into the arcane world of markets and debts. Initially the narration style of going along the path of fables and tales from the past, - notably from the Greek Mythology - finding parallels to explain the layman reader about the comple...

ஊழல் ஒழிப்பு வீரர்களும், அவர்களின் சாகச கதைகளும்...

Image
  பொதுவாக தேர்தலுக்குத் தேர்தல், ஊழல் ஒழிப்பு நாயகர்களும் அவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷங்களும் நம் மக்கள் முன் வைக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து,  தீவிரமாக மக்களின் தேர்தல் நேர கனவுகளை தூண்டுவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது.  தேசிய அளவில் சில கால கட்டங்களில் அவை   எழுப்பப்பட்டு மக்களும்  அதற்கு செவி சாய்த்து, ஆதரவளித்ததும் பிறகு ஏமாந்தததும் நமது சரித்திரத்தில் இடம் பிடித்தே இருக்கிறது. உதாரணமாக, அண்ணா ஹசாரே எழுப்பிய எழுச்சி இதற்கு ஒரு சமீப கால நிகழ்வு. இதில் பெருமளவில் ஈர்க்கப்படுவது நகர்மய நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் தான்.  பத்திரிக்கைகளை பொறுத்தவரை, அவர்களின் பசிக்கு கிடைத்த தீனி என்று, அவர்கள் அதை பரவலான உணர்வாக சித்தரித்து, அதை படிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கண்களை கவர்ந்து கொண்டு, வருமானத்தை அதில் ஈட்டிக்கொள்கின்றன. உண்மையில் நமது சமூகம் மட்டுமல்ல, வேறு பல சமூகங்களிலும் ஊழல் என்பது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விளங்கியே வந்திருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை, பழங்கால அரசர் காலம் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அளவுகளில் அது ...

மாரி ஆயியும் மாட்டுக்கறியும்.

Image
  பொதுவாக சாதி அடையாளமற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் மேல்தட்டு மனிதர்கள்,  “ நான் சாதியெல்லாம் பார்க்கறது இல்ல சார்… நான் என் நண்பர்களை சாதி பார்க்காம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிடுவேன் தெரியுமா?” என்று கூறுவதை அடிக்கடி நாம்  கேட்டிருக்கலாம். இந்த வார்த்தைகளில் ஒலிக்கும், போலித்தனம், மேட்டிமைத்தனம் மற்றும் மறைமுகமான சாதீயம், வெளிப்படையாக கேட்கப்படாத ஒரு கேள்வியில் ஒளிந்திருக்கிறது. “என்றாவது அதே கீழ்சாதி நண்பரின் வீட்டிற்கு சென்று அவர் உணவைப் பகிர்ந்து உண்டு இருக்கிறீர்களா?” என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில், பெரும்பாலும்   மௌனமாகவே இருக்கும்.   மறைந்திருக்கும் சாதீயம் வெளிப்படும் தருணம் அது. இது போன்ற உரையாடல்கள் எப்போதும் ஒரு வழிப்பாதையானவை.  அது எப்போதும் மேல் சாதியின்  உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி மட்டுமே பேசுமே தவிர தாழ்த்தப்பட்டவர்களின் உணவுப் பழக்கங்களை அல்ல. சில  நாட்களுக்கு முன், சமூக வலைதளத்தில் ஒரு புத்தகத்தின் சுட்டி ஒன்று கிடைத்தது. அதைப் படிக்கும் போது  எழுந்த எண்ணங்கள்தான் மேலே சொன்னவை.  அது...

Eating potato for dinner

Image
  We often hear someone who wants to show that he is "casteless" exclaim, " I never see caste! I bring all my friends, even my lower caste friends, home and share my food with them!" Besides this statement being pretentious, duplicitous and condescending, the casteism in the statement can be accentuated by an unsaid line in this. Instead if we ask him whether he had ever partaken food of his Dalit friend at his friends home, he would be exposed for his hypocrisy. This is always about "his/her" food. Not about the food of the lower caste / Dalit ‘friend' being shared. It never is. This book is journey born out of a workshop of an open class course work of a bunch of students from Krantijyoti Savitribai Phule Women’s Studies Center, University of Pune. The course opened up with the readings of Jhotiba Phule, Ambedkar and Periyar on empowering women and moved on to a workshop on caste and feminism. This workshop which opened as an earnest effort to unders...

இலக்கியம்: ஒரு புகைப்படக்காரனின் இதயம்.

Image
'கவிதை என்பது என்ன? அது என்ன மாதிரியான மாற்றங்களை மனதில் ஏற்படுத்துகிறது? எந்த  கணங்களில் அது நம் மனதை கலக்கிறது? ' இப்படிப்பட்ட கேள்விகளை எனக்குள்ளே நான் பல நேரம் கேட்டுக் கொள்வதுண்டு.   சிறு வயதில்  இருந்தே  பாரதியும், வள்ளுவனும், பாரதிதாசனும் என் வாழ்வின் கடினமான நேரங்களில் துணை வந்த போதும், கவிதை என்னும் வஸ்து, தொடர்ந்து பலவித மாற்றங்களை தன்னுள் கொண்டு மாறி வரும்போது, மாறிவரும் அதன் இருப்பும், அதன் வடிவமும், அதன் கருவும் இந்தக் கேள்விகளை எனக்குள் மறுபடியும் மறுபடியும் சுழன்று வரச் செய்து கொண்டே இருந்தது . என் தேடல் என்னை கல்யாண்ஜி (வண்ணதாசன்) கவிதைகளிடம் நிறுத்தியபோது, அந்த வரிகளில் எனக்குள் ஏதோ ஒன்று உள்ளே உடைந்து உருகியது உணர முடிந்தததும், அதற்காகவே அவர்  எழுத்தை திரும்ப திரும்ப நாடியதும் நடந்தது. இருந்த போதும்  என் கேள்விக்கு பதில் மட்டும் தெளிவாக கிடைக்கவில்லை… என் வாசிப்பின் எல்லை, புகைப்படக்காரனாய் என்னை நிறுத்தியபோதும், அதன் தாக்கம் எனக்குப் புரிபடாத ஒரு மாயமாகவே இருந்தது. என் புகைப்படங்கள், தி.ஜா., அ.முத்துலிங்கம், எஸ்.ரா என்று கதைசொல்லிகளி...