உணர்வுகளின் முகங்கள்
பொதுவாக,மிதமான கோவை தென்றலை அனுபவித்துக்கொண்டே, ஒணத்தியாக ரெண்டு அன்னபூர்ணா சாம்பார் இட்லியை உள்ளே தள்ளிக்கொண்டு, ‘காங்கயம் கரூர் அல்லாம் தாண்டுனா, பூரா வேறமாதிரி சனங்க…’ அப்படீன்னு வேக்கானம் பேசற ஆட்களை கோவை முழுவதும் பரவலாகக் காணலாம். அட, நான் கூட ஒரு காலத்தில் அப்படித்தாங்க இருந்தேன். அதனாலோ என்னவோ, அப்போதெல்லாம் என் மனம் தஞ்சை பயணத்தின் போது - லாலாப்பேட்டை வரும்போதே - வந்தியத்தேவனின் குதிரையிலும், மதுரை பயணத்தின்போது சுந்தரபாண்டியனின் வாள்வீச்சிலும் மூழ்கிவிடும் அபாயம் எப்போதும் இருந்ததுண்டு. அது தவிர்த்து எனக்கு நெல்லை என்ற ஊரைப்பற்றியெல்லாம், காந்திபுரம் நெல்லை லாலா சுவீட்ஸ் தாண்டி வேறெதுவும் தெரியாது. முதன்முதலில் மணிரத்னத்தின் படத்தில் ஜொலித்த நெல்லையின் மனிதர்களும் தாமிரபரணிக் கரையின் பசுமையையும் ஒரு புது கனவுப்பிரதேசமாகவே எனக்கு அது தென்படத்துவங்கியது. வெகு காலத்திற்குப் பின், இணையத்தில் தமிழ் மணக்கத் துவங்கிய நாட்களில், சுகா என்பவர் யார் என்று தெரியாது. ஆனால் அவர் சொல்வனத்தில் தவழ விட்ட நெல்லை மனிதர்களுக்கும், அதன் ...