Posts

சொல்லப்படாத வரலாறுகள்....

Image
  சிறுவயதில், தமிழின்  சரித்திரக்கதைகள் எனக்கு அறிமுகமானது குமுதம் மற்றும் கல்கி இரண்டிலும் தான். அதிலும் குமுதத்தில் தொடர்ந்து சரித்திரக்கதைகள் என்ற பெயரில் வந்த கதைகள் அனைத்திலும், பொதுவாக குதிரையில் விரைந்தோ, கப்பலில் பயணம் செய்தோ சாகசம் செய்யும் இளவரசர்களும், இடை சிறுத்த, வளைவு நிறைந்த, அந்த இளவரசர்கள் வாயைத்திறந்து இரட்டை அர்த்தம் தெறிக்கும் வசனங்களை பேசும் போது மட்டும் முகம் சிவக்கும் பைங்கிளிகளும் தான் பெரும்பாலும் உலவினர். ஏனோ திரைப்படங்களில் இருந்த கண்டிப்பு இப்படி மெதுவாக தமிழ் படிக்க ஆரம்பித்து வேகமாக வீட்டில் வரும் வார இதழ்கள் படித்தஇந்த  6-7 வயது சிறுவனுக்கு  இல்லை.  விடுமுறை காலத்தில்  என் தாத்தாவின் திரையரங்கத்துக்கு தினமும் நினைத்த நேரத்தில் சென்று படம் பார்க்கும் எனக்கு  “A”  அல்லது “UA “ சான்றிதழ் வாங்கிய படங்கள் என்றால் மட்டும்,  ( நகரமும் இல்லாது, கிராமமும் இல்லாத அந்த ஊரில் பொதுவாக மேட்டனி காட்சியில் தான் அப்படிப்பட்ட படங்கள் வெளியிடப்படும்) என் வருகை தடை செய்யப்படும். அதற்காகவே வாயில் காப்போர் சிலரை என் தாத்தா ஏற்பாடு செய்திருந்தார் என நினைக்கிறேன். அகஸ்மாத்தாக சி

வாழ்வின் உறைந்துபோன நொடிகள்...

Image
சிறு வயதில் தூங்கிக்கொண்டிருக்கும் போது உயரத்திலிருந்து திடுமென விழுவதுபோல் போல் கனவு அடிக்கடி வந்து திடுக்கென எழுந்துகொள்வதுண்டு. ஏதோவொரு நிகழ்வின் பாதிப்பு உள்மனதில் தங்கிப்போயிருப்பதின் வெளிப்பாடு தான் அது எனப் பிறகு உணர்ந்து கொண்டேன். பிறகு அதன் மீட்சியாக உயரத்தில் இருந்து கீழே பார்ப்பது என்பது எனக்கு ஏனோ மிகுந்த பயத்தை அளித்தது. வளர்ந்த பின்பும், உயரமான கட்டடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில், அவற்றின் உயரமான தளங்களில் இருந்து கீழே பார்ப்பதென்பது எனக்கு மிகுந்த பதட்டத்தை அளித்தது. திருமணமான பின்னும், பெங்களூரில் உள்ள பார்ட்டன் சென்டர் கட்டடத்தின் உயர் தளத்தில் லிப்டில் வந்து சேர்ந்த பின், கீழே பார்க்காமல் சுவற்றோடு ஒட்டியபடியே நகர்ந்த என்னை ஆச்சர்யத்துடன் என் மனைவி பார்த்து சிரித்தார். அதிலிருந்து மீண்டு வர, பிறகு மலையேற்றத்தில் ஈடுபட்டு இன்று ஓரளவு தேறியிருந்தாலும், அந்த நடுக்கம் முழுவதும் விலகி விட்டது என்று கூற முடியாது. இப்படி சிறு சிறு நிகழ்வுகளின் பாதிப்பு நம்மில் பலருக்கு இருக்கக்கூடும். அதிலிருந்து நாம் பிறகு மீண்டும் வரலாம். ஆனால் வாழ்வில் பேரதிர்வு தரும் துயரமான சம்

புயலுக்குப் பின்

Image
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும்,  பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது. மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது,  நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு  மாறிப்போனால்,  அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும். சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்வது. அப்படி இயல்பாக

Social Transformation with Imperial Cholas

Image
The issue with trying to pick up a Historical Narrative from the Sangam and Pre-Sangam era is less to do with the Scarcity of the source than the credibility of the information. Hagiography, Poetic Reading and Epigraphy from the Royal Inscriptions pepper the landscape of time and how a narration is pieced from these, separates a historian from a common bard. So someone who needs to trace a thread from such a past has to tread very carefully. The secondary Sources one quotes have to be stellar and non contentious. In this I would say Kanakalatha Mukund has walked a tightrope trying to paint the picture of the inception of the Tamil trading community. In doing so, whether she succeeded in that effort is a question that gets answered when we read the book. The book initially talks about the Tamil society, the evolution of its social and cultural structure. Most part of the book talks about the information gleaned from the literary source by triangulating the information from those sources

Correcting a willful distortion

Image
Growing up in Tamil Nadu I have been familiar with Thirukkural in many ways, both in school and outside. Buses, Business places, Government Office and many walks of our normal life had one or other Kural being displayed all over. In spite of that, the understanding of Kural and its meaning has been a much maligned affair. Of Late, the motivated Right wing propaganda machine is trying to appropriate this important text which is synonymous with Tamil ethos. It has reached a crescendo with Nagaswamy’s ill motivated work. Though there have been brisk push back from Various Tamil circles, the fact that the person who did this dastardly act enjoys an intellectual podium that transcends Tamil, and more than that, Thirukkural itself enjoys a wider audience beyond the Tamils, it is most fitting that a Solid rebuttal to that malicious propaganda comes out in English, catering to a wider audience outside the Tamil readers. This had been long due and when I read this book, I was overjoyed at the m