Posts

Image
  Human existence against overwhelming odds is extreme and spectacular as no where else, other than in the Arctic region. The people who live there against all odds face immense challenges that they have to cope by negotiating with elements of the nature. One important factor they have is the sled dog as a friend and Partner. Without those dogs, without their co-existence there can never be human life. The place where no plant life can be sustained, leaves no possibility for human life. Hence human is relegated to forage, hunt and find food by going far off into barren Ice. No Snowmobile, no Aircraft, no Automotive – all usual human implements of convenience – can work for men engaged in moving long distances across the Arctic region. By this, the human is going back in time, where he was not even a hunter gatherer, but as a scavenger following predators. Dogs who have a sense of things that humans are not normally gifted with, are the natural companions that help human reach his o...

நீரில் செல்லும் வாழ்வு.

Image
வாழ்வென்னும் நீரோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் ஓடங்கள்தான். ஓரிடத்திலிருந்தே பயணிக்க ஆரம்பிக்கும் ஓடங்களில், பல, இலக்கு மாறி எங்கெங்கோ செல்கின்றன; சில எந்தக்கரையிலும் வந்தேறாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றன; சில கவிழ்ந்தும் போகின்றன. வெகு சிலது மட்டுமே கரையேறி ஆசுவாசம் அடைகின்றன. இதனிடையே ஏதோ ஒரு கரையிலோ, நீரிலோ, அவை ஒன்றையொன்று எதிர்படக்கூடும்; சிறிது தூரம் சேர்ந்தும் பயணிக்கக்கூடும். ஏதோவொரு கரையில் இறுதியில் அடங்கியபின், அலகில்லாத ஒரு கணத்தில் திரும்பிப்பார்த்தால் எதுவும் மிஞ்சுவதில்லை - அவற்றின் நினைவுகளையும் , அலைபோல் அவை ஏற்படுத்திய உணர்வுகளையும் தவிர. அப்படி ஒரு ஓடத்திலேற்றி நீண்ட பயணத்தில் நம்மை அழைத்துச்செல்கிறார், மலையாளத்தின் பெரும் படைப்பாளியான M.T.V. படைப்பாளி என்பதைத்தாண்டி, அவர் ஒரு ராட்சதன் - வெறும் ராட்சதன் அல்ல, படைப்பில் ஒரு பிரும்ம ராட்சதன். சாகித்ய அகாதமி மற்றும் பல விருதுகளை அவருடைய படைப்புகள் பெற்றுள்ளன. அவருடைய மஞ்சு, இறுதி யாத்திரை போன்ற குறும்புனைவுகளையோ, அல்லது அவருடைய நாலு கட்டு , இரண்டாம் இடம் போன்ற நெடும் புனைவுகளையோ வாசித்திருந்தாலும், இந்த புத்தக...

குரு பார்வை

Image
பள்ளி கல்லூரி காலங்களில் என் நண்பன் குரு சொல்லும் விஷயம் தான் எனக்கு வேத வாக்கு… குன்னுரில் இருந்து ஆரம்பப்பள்ளி முடித்து, அதன் பின் தினமும் கோவைக்கு அன்னூரில் இருந்து பஸ்ஸில் வந்து போகும் கிராமத்தான் எனக்கு, கோவையின் நாசுக்கான நளினம் ஆரம்பத்தில் மிரட்சி அளித்தது. குன்னூர் பள்ளியில் அங்கிலோ இந்திய ஆங்கிலத்தில் உரையாடிய நிலை மாறி, ஆங்கிலத்தில் பேசினாலே நக்கலாக சிரித்துக்கொண்டே சுத்த “கோவை செந்தமிழில்” சர்வ சுதந்திரமாக வார்த்தைகளை வீசி பேசிக்கொள்ளும் மாணவர்கள் ஒருபுறம் என்றால், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உலாவும் நவநாகரிக சமூக வாரிசுகள் ஒருபுறம். பக்கத்திலேயே இருந்த பாரதி வித்யா பவனில் பரத வகுப்பில் சேர்ந்த பின், ஒருநாள், ஒரத்தில் இருந்த என்னிடம் அவனாக வந்து அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டான். புத்தகங்கள் தான் இருவரையும் இணைத்தது. உண்மையில் என்னை விட இரண்டு வயது இளையவனான அவனுக்கு நான் தான் இளைய சகோதரன். ஒரு புதிய புத்தகத்தை அவன் எனக்கு படிக்கச்சொல்லி பரிந்துரைப்பதே ஒரு அலாதியான நடைமுறை. நூலக அடுக்கில் இருக்கும் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் அதை புரட்டி முகர்ந்து பார்த்துவிட்டுத்தான் அதை அவ...

கவனமும் புரிதலும்

Image
ஒரு அதிகாலை புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மைசூர் பயணம். இடையில் சிற்றுண்டிக்காக, பெங்களூரின் பெயர்பெற்ற சைவ உணவகத்தின் கிளையில் நிறுத்தினோம். அது பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்பெற்ற ஊருக்கருகில் உள்ளது என்றபோதும், அங்கே வருபவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலை வழி செல்லும் பயணிகளாகத்தான் இருப்பர். உணவை சொல்லிவிட்டு, காத்திருக்கும் போது அருகில் உள்ள மேசைகளில் தென்படும் முகங்களை காண்பதும், அதைவிட அவர்கள் உண்ணும் உணவுத் தட்டை கவனிப்பதும் மிக சுவாரசியம். அதையும் மீறி அது, காத்திருக்கும் நம் வயிற்றுக்கும் சற்று முன்னோட்டமாகவும் இருக்கும் என்பது ஐதீக நம்பிக்கை. அப்படி நாங்கள் உணவுக்காக காத்திருந்த போது, அருகில் ஒரு வயதான பெண்மணி பளிச்சென்று கண்ணில்பட்டார். பார்த்தவுடன் பெங்களூரின் படித்த Progressive என்று பறையடித்துக்கொள்ளும் தோற்றம் மற்றும் உடை. பக்கத்தில் தன்னோடு வந்த பெண்மணியோடு சிரித்துப் பேசிக்கொண்டே உணவுண்டு கொண்டிருந்தார். உணவு உண்டபின் உணவகத்தின் பின்னே இருந்த பொது கழிப்பகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலில் நானும் எங்கள் செல்வனும் சென்றுவிட்டு பைகளை ஏந்திக்கொண்டு என் மனைவி வருவதற்கு...

The time of the Tiger

Image
  I have just managed to escape from a jungle in the east Thailand.. How did this happen? How did I end up there? This must be due to a book I bought while on a recent trip. As I usually do in every trip, this time also, I visited a bookstore in the town, eager to find a book that is at the top of the booklist there. Noticing my desperation, the shop assistant offered a book. This was the “The Understory” written by a Thai writer named Saneh Sangsuk. He is a leading fiction writer in Thailand. He has also managed to win remarkable awards in Thai and Global literary circles. However, his writings are only now being published in English. This book has been translated to English from Thai by a Mui Poopoksakul. Mui is a lawyer living in Berlin. She has translated several selected works of major contemporary Thai writers into English. This translation of hers, manages to convey the original emotions without being overpowering. Despite the British English accent, it is very easy and comf...

புலிகளின் காலங்கள்

Image
ஒரு அடர் கானகத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிறேன். இதுவரை நான் பார்த்தேயிராத தாய்லாந்தின் கிழக்குப் பகுதி காட்டிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கிறேன். எப்படி நேர்ந்தது இது? ஒரு தொழில் முறை பயணமாக சென்றபோது கண்டெடுத்த ஒரு புத்தகத்திலிருந்து தான் இந்த நிகழ்ந்திருக்க வேண்டும். வழக்கமாக செய்வது போலவே இந்த முறையும் அந்த ஊரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு சென்று அங்கே என்ன புத்தகம் இப்போது மிகவும் வாசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்று அறியும் ஆவலோடு சென்றேன். அப்போது அங்கிருந்த கடைச் சிப்பந்தி எனக்காக தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகம் தான் இது. இதை எழுதியவர் சனே சங்சுக் (Saneh Sangsuk) எனப்படும் ஒரு தாய்லாந்து எழுத்தாளர். தாய்லந்தின் குறிப்பிடத்தக்க முன்னணி புனைவு எழுத்தாளர் இவர். அந்த நிலத்தின் முக்கிய கதை சொல்லியான சனே, அவர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் குறியீடாக வைத்து தன் எழுத்துகளில் மாயவித்தையை நிகழ்த்திக் காட்டும் வித்தைக்காரர். தற்கால தாய் இலக்கிய பரப்பிலும், உலக இலக்கிய பரப்பிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஆனாலும் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருவது இ...