மண்ணுக்குள்ளிருந்து எழும் குரல்கள்...
“மாயமாய் உயிரை மாய்க்கும் கனி(ம) வேலை என்னண்ணா… மார்பில் ரத்தம் வடிய நித்தம் உழைப்போம் என்னண்ணா… பாறைக்குள் படர்ந்து நிற்கும் பசுமரத்தங்கம்… அதைப் பக்குவமாய் பிளந்தெடுக்கும் பாட்டாளி சிங்கம்! குறையில்லா கோபுரமாய் ஆன அரங்கம்… கொடிய அணுகுண்டு போல வெடிக்கும் சுரங்கம்... மாயமாய் உயிரை மாய்க்கும் கனி(ம) வேலை என்னண்ணா… மார்பில் ரத்தம் வடிய நித்தம் உழைப்போம் என்னண்ணா…” பழைய சி.ஸ்.ஜெயராமனின் குரல் போலவே, மெதுவாக, நடுக்கத்துடன், பின்னணியில் ஒலிக்கும் குரல் நம்மை இருளான சுரங்கத்துக்குள் தொழிலாளர்களுடன் அழைத்துச்செல்லும் போது, அதன் துயரமும், பயங்கரமும், அதை தினமும் போராடி வெல்லும் தொழிலாளர்களின் குரலாகவே அது கேட்கிறது. ஜெலட்டின் விபத்து, பாறை வெடிப்பு போன்றவற்றைப்பற்றியும், அதன் மரணங்களைப்பற்றியும் எதார்த்தமாக அவர்கள் கூறும்போது அவர்களின் குரலில் இல்லாத பயங்கரம், அதன் அர்த்தம் புரியும் போது முகத்தில் அறைகிறது… 1800 களில் , ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது போது இதற்காகப் பெருமளவில் மக்கள் , தமிழ...