Posts

Showing posts from August, 2026

ஒரு கோப்பைத் தேநீர் - பாகம் 2

Image
தினமும் அதிகாலையில் டீக்கடைகள் பள்ளியெழுச்சி பாடுவது கோவையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தான். பசியோடு அதிகாலையிலேயே பணியை துவங்கும் துப்புரவுத்தொழிலாளிகள் முதல் பஸ் பிடித்து எட்டே காலுக்குள் வருகையை பஞ்ச்சடிக்க வேண்டும் என்று ஓடும் ஆலைத் தொழிலாளிவரை, சாமானியர்களின் பசிக்கும் வயிற்றுக்கு அமைதியளிக்கும் அருமருந்து, அந்த பத்து ருபாய் டீ தான். ஆரம்பகாலத்தில் எத்தனையோ முறை ஷாப் பிளோரில் சாப்பாட்டு நேரம் கடந்து பழுதான இயந்திரத்தோடு மல்லுக்கட்டி, சரிசெய்துவிட்டு பசியில் சுருசுருக்கும் வயிற்றோடு கீழே இறங்கிவந்தால், பக்கத்தில் இருந்த ஆப்ரேட்டர், "தம்பி , நீங்க பாட்டுக்கு மும்மறமா வேலைய பாத்துட்டு இருந்திங்க... டீ சப்ளை நேரமாச்சு, அதனால உங்களுக்கும் ஒரு டீ வாங்கிவச்சேன்.. இந்தாங்க" என்று நீட்டும்போது, அப்போது பொங்கி வரும் உணர்வை "ரொம்ப தேங்க்ஸு ங்கண்னா" என்ற இருவார்த்தைகளில் எல்லாம் அணை போட முடியாது. அப்படி எல்லோருக்கும் சஞ்சீவனியாய் திகழும் தேனீரின் பழுப்புப்பக்கங்கள் ரத்தம் தோய்ந்து என்றால் நம்பமுடியுமா? அப்படித்தான் எனக்கும் இருந்தது. சிறு வயதில் குன்னுரில் வளர்ந்த என...

ஒரு கோப்பைத் தேநீர் - பாகம் 1

Image
வீட்டில் அப்பா எப்போதும் டீ மட்டுமே குடிப்பார். இன்று வரை அவருக்கு எந்த சந்தோஷமும் துக்கமும் ஒரு கோப்பை தேநீரில் தீர்ந்து போகும். அம்மாவை மணம் புரிந்த பின் என் பாட்டிக்கு அதிர்ந்து பேசாத, மரியாதையான, குறிப்பாக டீ மட்டுமே குடிக்கும் மாப்பிள்ளை என்பதில் ஏகப்பெருமை. அவர் என்ஜினீயர் என்பதோ, அரசு அதிகாரி என்பதோ அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. டீ குடிப்பதைத்தவிர வேறு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாத மாப்பிள்ளை என்பது அவளுக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது. கடைசி வரை பிளாஸ்கில் தீரத்தீர காபியை அவளிடம் கேட்டு வாங்கி வைத்து, இரவு பத்து மணிக்குக் கூட குடிக்கும் தாத்தாவின் கணக்கில் அவருடைய காப்பி குடிக்கும் பழக்கமும் ஒரு கெட்ட பழக்கமாகவே அவள் அகராதியில் என்றும் இருந்தது. அத்தோடு இதையெல்லாம் சொல்லிச் சொல்லி என்னை வெறும் பால் மட்டுமே குடிக்க வைத்து வளர்த்தாள். கல்லூரி படிக்கும் காலத்தில் போரடித்தால் கட்டடித்து விட்டு டூ வீலரில் மலையேறி குன்னூருக்கோ ஊட்டிக்கோ சென்று TANTEAயில் டீ குடித்துவருவது தெரிந்திருந்தால் டீ குடிப்பதைப்பற்றிய அவளுடைய அபிப்பிராயம் என்னவாகியிருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட ப...