Posts

Showing posts from September, 2026

நீரோட்டப்பயணம்

Image
" - தெனமு ராணி தண்ணி சேந்தியெடுக்க அவியை வூட்டு கெணத்துக்கு போவா. அன்னைக்கு அதே மாறி போனாளா... போயி உள்ள எட்டிப்பாக்கையில ராசா குடுத்த அவ மூக்குத்தி களுண்டு உள்ள உளுந்திருச்சு..." இந்த இடத்தில் தாத்தா கதையை நிறுத்தி விட்டு அமுக்கமான ஒரு சிரிப்பை தெறிக்க விடுவார். அதுவரை ஆர்வமாய் வாயை பிழிந்து கதை கேட்ட பொடிசுகளில் ஒன்று, ஆவல் அடக்க முடியாமல், "ம்... ம்... ?"என்று பரபரக்கும். அதற்கும் ஒரு நிதானமான சிரிப்பை உதிர்த்த தாத்தா, "ம் ன்னா வந்துருமா ? " "அட,... அப்பறோ? " "அப்பறோன்னா வந்துருமா?!" இந்த இடத்தில் இது வரை அவர் சொன்ன மத்த கதைகளை ஆர்வமாக கேட்டுக்கொண்டு வந்த கொஞ்சம் வளர்ந்த டிக்கட்டுகள் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்றது என்று புரிந்து நழுவ ஆரம்பிக்குங்கள். ஆனால், இன்னும் விவரம் புரியாத ஏதோ குழந்தை மாத்திரம், "... என்ன தாத்தா ஆச்சு?" என்று சிணுங்கும் குரலில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடரும். ஆனால் அதற்கும் அவர், வேதாளம் போல, "ஆச்சுன்னா வந்துருமா?!" என்று மரத்தில் ஏறிவிடுவார்... இப்படியே இன்னும் சில கணங்கள் மாறிமா...