Posts

A revealing View

Image
Robert Seethaler is an Austrian writer I discovered in one of my recent trips. While browsing books from the curated list in a German Airport Book store, ( Which I do every time when I go to a new city or Country ) I was immediately hooked by the Simple story line. I immediately filed this in my to list. Soon after returning, I started reading his "The Tobacconist" on my Kindle when I realized that I had bought this book sometime back and had not read it yet. From the start, the images those simple lines evoked were magical. The Translation by Charlotte Collins is so refreshingly smooth. It has managed to catch all the "Austro-German" Nuances that oozes out of Seethaler's narration. The Language and the images it evoke, sometimes Funny, sometimes Poignant, is very strong and dazzling. If you want to read a fine, Nuanced international literary work in recent times without much of exertion, I would strongly recommend you this book. In 240+ pages, this is a beautif...

விளிம்பில் நடக்கும் வரிகள்

Image
  என் சமீபத்திய பயணம் ஒன்றில், ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் தான் ராபர்ட் சீதாலர் ( Robert Seethaler) என்னும் ஆஸ்திரிய எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். நான் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது, அந்த நகரின் புத்தகக்கடைக்கு சென்று அங்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களை புரட்டி, புதிதான வாசிப்புக்கு அச்சாரம் போடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அப்படித்தான் அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பை அங்கே கண்டெடுத்தேன். அப்படிப் புரட்டிய புத்தகத்தில், ​​அதன் எளிமையான வரிகளும் அதன் உருவகங்களும் மனதிற்குள் ஆணியடித்து சட்டமாகவே அமர்ந்துவிட்டன. வேறு ஒரு நெடும் புதினத்தின் வாசிப்பின் இடையே, இளைப்பாற, வேறொரு புத்தகத்தை தேடியபோது, கிண்டிலில் வாங்கி வைத்திருந்த அவரது "தி டொபாகோனிஸ்ட்" ( The Tobacconist / Der Trafikant ) என்ற புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். தொடக்கத்திலிருந்தே, அந்த எளிய வரிகள், அவை கண்முன் நிறுத்திய காட்சிகள் என்று அனைத்தும் பட்டென்று மனதில் சென்று ஒட்டிக்கொண்டன. அதற்குக் காரணம், சார்லோட் காலின்ஸ் (Charlotte Collins) மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிறந...

நினைவில் மறைந்துபோன தடங்கள்

Image
ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நிலப்பரப்பைப் பற்றிய அல்புனைவு எழுத்து என்பது அரசியல், கலாச்சார வரலாறு மற்றும் சமகால நிகழ்வுகள், நேரடி கள அனுபவங்கள் எனப் பலதளங்களில் பயணிக்க நேர்கிறது. அதனால் இப்படிப்பட்ட படைப்புகளுக்கு மாறுபட்ட, பன்முகத் திறன் கொண்ட படைப்பாளிகள் தேவைப்படுகிறனர். அதே சமயம், பலநேரங்களில் அப்படிப்பட்ட படைப்பாளிகள் அது தொட்டுச்செல்லும் எல்லா துறைகளிலும் திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல். அப்படி அனைத்திலும் தேர்ந்தவர்களாக இல்லாதவர்கள் கூட சற்று தடுமாறும் ஏதோ ஒரு பரிமாணத்தை தங்கள் சுவாரசியமான கதையாடல்களால் இட்டு நிரப்பி வாசகர்களின் கவனம் சிதறாமல் தக்க வைத்துக்கொள்ளும், கெட்டிக்காரத்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆலிஸ் அல்பினியா, அப்படி ஒரு கெட்டிக்காரர். அடிப்படையில் அவர் ஒரு இலக்கிய மாணவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்ற அவர், தனது இளங்கலை பட்டத்திற்கு பின் நேரடியாக இந்தியாவில் பத்திரிக்கையாளராக பணிபுரிய ஆரம்பித்தார். பிறகு தென் கிழக்கு ஆசிய வரலாற்றில் பட்டம் பெற்றிருந்தாலும், பத்திரிக்கையாளராகவே தொடர்ந்தார். அதனால் வரலாற்று பய...

மரபும் சிந்தனையும்

Image
  ஒரு படைப்பு என்பது எதனால் வாசகனுக்கு நெருக்கமாகிறது? மொழியா? இல்லை கதைசொல்லும் பாங்கா? இல்லை கதையின் பாத்திரப்படைப்பா? இல்லை சொல்லவரும் கருத்தா? வாசிப்பவரின் ரசனைக்கு நெருக்கமானவை மொழி, கதைசொல்லும் பாங்கு மற்றும் அதில் உலவவிடப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை. இவை அனைத்தையும் கொண்டு தான் படைப்பாளி தன் கருத்தை, அதை உருவாக்கிய சித்தாந்தத்தை, வாசகனிடம் கடத்துகிறான். பொதுவாக வாசகர்களின் ரசனைக்கு, அதன் தேடலுக்கு, ஒரு சிறந்த படைப்பாளி படையலிடும் விஷயங்கள் உச்சத்தையும் பிரமிப்பையும் அளிக்கும். அரிதாகவே சில வாசகர்களுக்கு மட்டும் சில நேரங்களில், அந்த அனுபவதில் திளைத்துக்கொண்திருக்கும் போதே அதைத்தாண்டி, படைப்பாளியின் அடிப்படைக் கருத்தாக்கம் என்ன என்ற கேள்வி எழும். அதுதான் படைப்பாளியும் அவன் வாசகனும் உரையாடும் கணம். S.L. பைரப்பா கன்னடத்தின் மிக முக்கியமான படைப்பாளி. அவருடைய பல படைப்புகள் பரந்த வாசிப்பும் கவனமும் பெற்றவை. அவருடைய இந்த "வம்ச விருட்சம்" கன்னட சாகித்ய அகாதெமி விருது பெற்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரிதும் வாசிக்கப்பட்டுள்ளது. அவருடைய பல நாவல்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெய...

போரின் உண்மை முகம்

Image
  ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸின் தனிமையான ஒரு மலைக்கிராமம் அது. இரண்டாம் உலக போருக்குப் பின்னான சூழல். அப்போது அந்தப் பகுதிக்கு தலைமையேற்க வரும் நேச நாட்டு படைகளைச்சேர்ந்த பிரிட்டிஷ் மேஜரின் ஜீப் ஓட்டுனரை, அந்த மலைப்பாதையில் வைத்து, சரணடைந்த ஆஸ்திரியப் படைப் பிரிவின் அடையாளம் தெரியாத வீரன் ஒருவன், மர்மமான முறையில் சுட்டுக்கொல்கிறான். தப்பித்துப்போன அவனைத் தேடும் ஒரு தேடலில் பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை. கச்சிதமான Alastair Maclean நாவலின் துவக்கம். அதே மொழியாளுமை. ஆனால் “The second victory” என்ற இந்தக் கதையின் அடிப்படைக் கரு அதுவல்ல. காரணம் இதை எழுதியது, Morris West. Morris ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே செயின்ட் கில்டாவில் பிறந்தவர். இளவயதிலேயே தனது தனிப்பட்ட வாழ்வின் சிக்கலில் இருந்து விடுபட ஒரு கத்தோலிக்க திருச்சபையின் அமைப்பில் சேர்ந்தவர். வளர்ந்த பின் அதிலிருந்து அவர் விலகி வந்தாலும், அவருடைய எழுத்தில் விவிலிய மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நிழல் எப்போதும் படிந்தே இருந்திருக்கிறது. பரபரப்பாக ஆரம்பிக்கும் அவருடைய நாவல்கள், மனித மனத்தின் அடிப்படைச்சிக்கல்கள், அதனால் ஏற்படும் வ...

𝐌𝐚𝐤𝐢𝐧𝐠 𝐨𝐟 𝐚 𝐃𝐫𝐞𝐚𝐦

Image
Ira Mukhoty comes from a Long list of History writers who have produced some highly read books on Indian theme. This list includes glamorous array of writers from William Dalrymple, stretching along with Manu S. Pillai, Anirudh Kanisetti etc... While William Dalrymple enjoys a wider readership and commands respect as a Historian, not many of those in the array are traditional Historians. On that note, Ira is one who is not a trained historian but has a Wonderful Eye to the Facts and Narrations built around findings off other historians. Thankfully, unlike the latest mass heart throb, Kanisetti, she does not ride on wave of sensationalism. Instead her writing is much more detailed and balanced, so much so that the amount of information that pours out of the reading makes one almost dizzy. Her writing does not offer instant gratification to the reader. But what it lacks in sensation, it more than enough makes up with detailed and Nuanced narration sans any bias. Whatever it is, it is suc...

தொலைந்து போன வார்த்தைகள்

Image
  ஒரு கடல் இரு நிலம், ஆங்கிலத்தில் By the sea என்று அப்துல்ரஸாக் குர்னா எழுதிய அழகிய நாவல். குர்னாவை பற்றி புதிதாக சொல்ல ஏதும் இல்லை.ஏற்கனவே அவருடைய இரு நூல்களை வாசித்த அனுபவம் மிக அருமை. அவர் நோபல் பரிசு பெற்றதற்கு முன்பு வெளிவந்த நாவல் இது. அகதியாக குடியேறிய அவர் மனதுக்கு மிக நெருக்கமானதாக இந்த நூல் இருந்திருக்கவேண்டும். நோபல் பரிசின் இணைய காணொளியில் அவர் தேர்ந்தெடுத்து வாசித்தது இந்த புத்தகத்தின் பக்கங்களைத்தான். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சசிகலா பாபு. இவருடைய பத்தாவது மொழி பெயர்ப்பு இது. அந்த அனுபவம் இதில் தெரிகிறது. இவர் மொழிபெயர்த்த ஒரிய எழுத்தாளர் கோபிநாத் மோகந்தியின் மொழிபெயர்ப்பான சோற்றுப்பாடு என் வாசிப்பு பட்டியலில் உள்ளது.  “மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் தேநீர் பருகினோம். ஹாம் துண்டுகளைக் கைகாட்டி வேண்டாமென நான் சிலியாவிடம் தலையாட்டினேன். “பன்றி” காதுவரை இளித்துக்கொண்டுச் சொன்னான் இப்ராகிம், அந்த கேலியை ஜார்ஜியிடமும் சொல்லத் திரும்பினான். “முஸ்லிம் இல்லையா, பன்றியிறைச்சி சாப்பிட மாட்டார், மூத்திரத்தில் சாராயவாடை இருக்காது. சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழ...