Aliyah என்னும் பெரும் பயணம்.
ஒவ்வொரு முறை மனித இடப்பெயர்வு நிகழும் போதும், மனித இனம் தனது சரித்திரத்தில் ஒரு பக்கத்தை புதிதாக எழுதுகிறது. ஒரு இனம் அல்லது கூட்டம் இடம் பெயர்ந்தது என்று குறிப்பிடும்போது, பொதுவாக கடந்துவிடும் சரித்திரம், அந்தக் கூட்டத்தில் உள்ள தனி மனிதர்களின் மன ஊசலாட்டங்கள், கலக்கங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை பெரிதும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், எந்த ஒரு இடப்பெயர்வும் அது போன்ற தனி மனிதர்களின் மனவோட்டங்களின் வெளிப்பாடுகளையும், அதன் வழியே நிகழும் பல்வேறு நகர்வுகளையும் கடந்தே செல்கின்றது. அப்படிச் செல்லும் தடங்களை பதிவு செய்யும் இலக்கியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கேவலம், ஒரு வீடு மாறும் நிகழ்வே சிலநேரம் உணர்ச்சிப்பெருக்கின் ஆதாரமாக உருவெடுக்கும்போது, தலைமுறை தலைமுறையாக வேர்விட்ட உறவுகளை, அறுத்துப் போகும் பெரும் சமூக இடப்பெயர்வு என்பது எவ்வளவு ஆழமான தடங்களை விட்டுச்செல்லும்? யூதர்களின் வாழ்வே அப்படிப்பட்ட ஓயாத அலைக்கழிப்புகளாலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இடப்பெயர்வுகளாலும் நிறைந்திருப்பது வரலாற்றின் பக்கங்களை புரட்டியவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு முன்பே பைபிளின் The Book of Exodus என்ற...