Posts

Showing posts from November, 2026

கோடைக்குப் பின்னான குளிர்...

Image
  எல்லாம் ஓஸ்லோவின் ஒரு மழைநாளில் துவங்கியது. ஒரு சிறிய புத்தக அங்காடியைப் பற்றிய பரிந்துரை என்னை வழிதேடி ஓட வைத்தது. அங்கே இருந்த சிப்பந்தி காட்டிய, தேர்ந்த மொழிபெயர்க்கப்பட்ட நோர்வேஜிய படைப்புகள் கொண்ட சிறிய அடுக்கில் இருந்து இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பக்கங்களைப் புரட்டியதும், வரிகள் வந்து மனதோடு ஒட்டிக்கொண்டன. உண்மையில் எதுவுமே ஒரு நாளில், ஒரு பொழுதில் துவங்குவதில்லை. முந்தைய பொழுதுகளின் நிகழ்வுகள், நிழல்களாக நீள்கிறது. பின் அதுவே மனதில் தொக்கி ஒரு கேள்விக்குறியாய் பிரமாண்டமாக உருப்பெறும்போதுதான் திடீர் என அதன் இருப்பு ஒரு நாள் வந்து உறுத்தத்துவங்குகிறது. உறவுகளுக்கிடையே எழும் நம்பிக்கைகள், உடைந்து போகும் போது வரும் வலி மனதிற்குள் நீங்காத ரீங்காரமாக இருந்து, அழுத்தம் தரும். அந்த நேரத்தில் அதை ஜீரணித்துக்கொண்டாலும், பிறகு பலநேரங்களில் நாம் தேடுவதெல்லாம் அதற்கான நியாயம் அல்ல. ஆங்கிலத்தை சொல்லும் closure என்னும் வெறும் முடிவுதான். ஆனால், அதுவும் கூட அரிதாகத்தான் சிலருக்குக் கிட்டுகிறது. அப்படி ஒரு சிக்கலைத்தான் "Out Stealing Horses" என்ற இந்தப் புதினம் பேசுகிறது. இதை...